பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளதாகவும், பிரச்னைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மீது சாடியுள்ளார்.
தேர்தல் வியூக வகுப்பாளராக அடையாளம் காணப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதற்கு காங்., கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
லக்கிம்பூர் சம்பவத்துக்குப்பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment