Tuesday, October 19, 2021

பகுத்தறிவு கள் மிக வேகமாக கம்பு சுற்றும் போதே தெரிந்துவிட்டது....

 வடிவேலு படத்தில் ஒரு நகைசுவை காட்சி வரும் உனக்கு எப்பொழுதெல்லாம் சமாளிக்க முடியாத மாதிரி பிரச்னை வருகிறதோ அப்பொழுது இந்த பெட்டியை எடுத்து பார் அதில் உனக்கு தேவையான உதவி கிடைக்கும் என்று சொல்வார் அது போல் தான் கருணாநிதி அவர் சாவதற்கு முன் இது போல் சில பல பெட்டிகளை தன் மக்களிடம் கொடுத்துவிட்டு சென்றிருப்பார் என்று தோன்றுகிறது.

நேற்றைய அண்ணாமலை பிரஸ் மீட்டில் சன் டிவியில் ஆரம்பித்து மின்சாரதுறை வரை அனைவரையும் போட்டு ஒரு தாக்கு தாக்கியதில் ஆடி போன அறிவாலய வட்டம் வேகமாக சென்று அப்படி கருணாநிதி கொடுத்த ஒரு பெட்டியை எடுத்து பார்த்துள்ளது அதில் மொழிப்போர் என்று எழுந்திருந்தது. உடனே வெடித்தது zomato விவகாரம். இப்பொழுது நடந்த விவகாரம் என்ன என்று திரும்பி பார்க்கவேண்டும் அது நம் அனைவர்க்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். இந்த விவகாரத்தில் நமக்கு இருக்கும் சந்தேகங்களை மட்டும் எழுப்புவோம்.
1. விகாஸ் என்ற நபர் தன்னுடைய ட்விட்டர் ஐ டி (vikash67456607) என்ற ஐடி யை மே 2021 இல் துவக்குகிறார். இது வரை எந்த ஒரு டீவீட்டும் போடாத அந்த நபர் இந்த zomato விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தன் முதல் ட்வீட்டை போடுகிறார். பார்க்க படம் 1. அதில் அனைத்து திமுக தலைவர்கள், எம் பி, எம் எல் எ க்கள் மற்றும் சில அல்லக்கை மீடியாக்கள் என்று ஒரு 20 பேரை மிக சரியாக ட்வீட் செய்கிறார். முதல் டீவீட்டிலேயே இப்படி அத்தனை பேரின் ட்வீட் ஐ டியை டேக் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
2. விகாஸ் என்னும் பெயர் வடமொழி பெயர் பெரும்பாலும் தமிழர்கள் வைத்து கொள்ள மாட்டார்கள் அதுவும் இவர் எழுதுவது போல் vikash என்று பெரும்பாலும் உபி, பீகாரை சேர்ந்தவர்கள் தான் எழுதுவார்கள் இவர் பேரை பார்த்து இவர் இந்திக்காரர் என்று நினைக்க எல்லோருக்கும் இயல்பாகவே தோன்றும். அதனால் கூட அவர்கள் இந்தியில் பேசி இருக்கலாம்.
3. zomato நிறுவனமும் ஆரம்பத்தில் இவர்கள் சதி திட்டம் புரியாமல் இவர்கள் விரித்த வலையில் விழுந்தது பின்னர் சுதாரித்து கொண்ட zomato நிறுவனம் நாம் எழுப்புவதை போல சில பல கேள்விகளை கேட்க அந்த நபர் தன் ட்விட்டர் ஐ டியை மூடிவிட்டு ஓடிவிட்டார். zomato இறங்கி வந்த போழ்து கூட அந்த நபர் பொது மன்னிப்பு, திராவிட மண் என்று கம்பு சுத்திக்கொண்டிருக்க ஆ...ஆ...இவன் யாரோ கோபாலபுரத்து ஆளுயா என்று சுதாரித்து சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் பணியில் அமர்த்தியது
4. இந்த பிரச்சனையால் zomato ஆப்பை தமிழகத்தில் பலர் uninstall செய்ய #rejectzomato என்று ட்ரெண்ட் செய்ய அதன் விளைவாக zomatoவின் பங்கு ஒரே நாளில் 1.50 ரூபாய் வரை குறைந்தது என்று சன் நியூஸ் செய்திகளில் போட்டு காட்டி சுயஇன்பம் கண்டது (நேற்றைய அண்ணாமலை விவாகரத்திற்கு பிறகு சன் டிவியின் பங்கு ஒரே நாளில் 6 ருபாய் குறைந்தது என்பதை வசதியாக மறந்து விட்டது)
5. கல்யாணராமன் போட்ட ட்வீட் சமுதாய அமைதியை கெடுகிறது என்று அவரை நள்ளிரவில் கைது செய்த திமுக அரசு இந்த ட்வீட் போட்டவரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை. இவரால் நாட்டில் மீண்டும் மொழி பிரச்சனை எழுந்துள்ளது. இதற்காகவே காத்து கொண்டிருந்த மார்க்கெட் போன அரசியல்வாதிகள் தமிழ், தமிழ் என்று கிளம்பிவிட்டார்கள். மத்திய அரசு மற்றும் zomato நிறுவனம் இந்த பிரச்சனையை கிளப்பியவர் உண்மையில் யார், அவர் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார். இது போன்ற டூல்கிட்களை வைத்து சமூக அமைதியை கெடுப்பது யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும்.
May be a Twitter screenshot

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...