நேற்றைய பத்திரிகை சந்திப்பில் அண்ணாமலை கிளப்பிய விவகாரம் சாதாரணமானது அல்ல
தமிழ்நாட்டின் மின் சக்திவழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினை ஆளும்கட்சி கோஷ்டிகள் வளைத்து தமிழக மின்சார வாரியத்தில் ஏதோ செய்ய திட்டமிடுவதை பகிரங்கமாக தெரியவித்தார் அண்ணாமலை
அத்தோடு இந்த நெருக்கடி கைவிடபடாவிட்டால் சம்பந்தபட்ட அனைத்து ஆவணங்களும் வெளியிடபடும் என அவர் தெரிவித்ததெல்லாம் தமிழகத்தை அதிர வைத்திருக்கின்றன
இப்படி ஒரு எதிர்கட்சி தலைவர் 1970களிலே இருந்திருபார் என்றால் திமுக என்றோ கரைந்திருக்கும், அதிமுக உருவாகியிருக்காது, தமிழகம் இவ்வளவு ஊழல் பெருகி நாசமாயிராது
அண்ணாமலை தமிழக அரசின் நகர்வுகளை அறிந்து எச்சரிப்பது புதிது, வரலாற்றில் புதிது
தமிழகத்தில் இப்படி ஒரு எதிர்கட்சி தலைவன் இதுகாலமும் இல்லை, இவ்வளவு பொறுப்பாக இல்லை. காலம் தந்த கொடையாக தமிழகத்துக்கு அவர் கிடைத்திருக்கின்றார்
அவரின் படிப்பும் முதிர்ச்சியான அனுபவமும் இன்னும் சில தகுதிகளும் அவருக்கு கைகொடுக்கின்றது
முன்பு ஜெயாவும் கருணாநிதியும் தங்கள் சுயலாபத்துக்கு அன்றி அரசை சாடியதே இல்லை என்பது குறிப்பிடதக்கது
இங்கு ஊழல் பெருகவும் இன்னும் எத்தனையோ அலங்கோலங்களும் நடக்க ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இருந்த ஒருவித புரிந்துணர்வே காரணம்
அது இப்பொழுது தகர்கின்றது, பாஜக சரியான எதிர்கட்சியாக எழுகின்றது
அதிமுக கடும் சிக்கலில் சிக்கி சரியும் நிலையில், கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்ட நிலையில் தமிழக அரசியல் களம் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் களமாக மாறிவிட்டது
திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் எதிர்கட்சி தலைவராக அண்ணாமலை உருவாகிவிட்டார், அவருக்கான பாதுகாப்பினையும் இதர உத்திரவாதங்களையும் ஒழுங்கு செய்து தரவேண்டியது மத்திய அரசின் கடமை
தமிழக அரசியலுக்கு ஒரு விடிவெள்ளி கிடைத்திருப்பது நல்ல விஷயம், தொடர்ந்து அண்ணாமலை இம்மாதிரி விஷயங்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டுவர வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment