Saturday, October 16, 2021

பா ம க வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையா?

 வருங்கால முதல்வர்...

சின்ன மாங்கா...
இப்போது நிரூபணம் ஆகிவிட்டது..???
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, பாமக, நாம் தமிழர் என்று இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பன்முக போட்டி நிலவியது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக கட்சி மாபெரும் தோல்வியை நோக்கி சென்றுள்ளது.
பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது.
தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்கள் என்பதால் இங்கு பாமக தனித்து போட்டியிட முடிவு செய்தது. பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். வாக்கு வங்கியை உயர்த்தலாம்.
அதைவைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுவிடம் பேரம் பேசலாம்... என்று நம்பி பாமக இங்கே களமிறங்கியது. ஆனால் பாமக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய சறுக்கலை அக்கட்சி வடமாவட்டங்களில் சந்தித்து உள்ளது.
இந்த நிலையில்தான் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் பாமகவை விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். நேரடியாக பாமகவை குறிப்பிடாமல் செந்தில்குமார் எம்பி விமர்சனம் செய்துள்ளார். செந்தில்குமார் எம்பி செய்துள்ள ட்வீட்டில்
உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற செய்தியை விட பாமக தன் செல்வாக்கை 7 வடமாவட்டங்களில் நிரூபிக்க போட்டி போட்டு வெற்றியை இழந்து நிற்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏழு வட மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வருங்கால முதல்வர் சின்ன மாங்கா அவர்களுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...