தெரிந்ததும்,தெரியாததும்..நம்மில் சிலருக்கு தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை...*
*தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அருவருப்பானதாம், இழிவாம், தன்மானத் தாழ்வாம், குழப்பமாம், மானக்கேடாம்...!*
*ஆனால்!, இப்படி இல்லவே இல்லை. தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு என்கிறார் சீன ஞானி கன்பூசியஸ்...*
*எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்...
அறியாமை, வெட்கப்பட வேண்டியதே அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதற்குத்தான் வெட்கப்பட வேண்டும்...
*மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு வடக்காக ஓடுகிறது கொங்கண் புகைவண்டிப் பாதை. இந்த புகைவண்டிப் பாதையில் பயணிப்போர், மேற்குபுற சாளரத்தினோரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம்...(சாளரம்- ஜன்னல்)*
*கிழக்கு பக்க சாளரத்தினோரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காணமுடியும்...!*
*மறுபுறம் பார்க்கத் தவறவிட்ட இந்தப் புகைவண்டிப் பயணிகளை குறை கூறவியலுமா...?*
*இப்படித்தான், நம் அறியாமைகளும்!, நாம் பயணிக்கின்ற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா...?*
*கடற்கரைப் பகுதியைக் கண்டவர்களும், மலைத் தொடர்ச்சிகளை கண்டவர்களும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறு இல்லையோ...!,*
*அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற பொழுது, தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமலும், எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது என்று நடிக்காமல்,*
*'கூறுங்கள்'...!, எனக்கு நீங்கள் கூறும் நிகழ்வு புதியதாக இருக்கிறது என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இதுதான் அறிவுக்கூர்மையும் கூட...!*
*பல நாட்கள் கழித்து இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள், ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பவர். இன்னொருவர் வெளிநாட்டில் வசிப்பவர்...*
*அவர்கள் உரையாடிக்கொண்டு இருந்தபோது வெளிநாட்டு நண்பர் திடீரென,* *"புராக்காஸ்டினேஷன் (procrastination)"*என்று ஒரு சொல்லைக் கூறினார்...*
*அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்(PROCRASTINATION)னு ஒரு வார்த்தை பேசும்போது கூறினீர்களே ; அதுக்கு என்ன பொருள்...?' என்று கேட்டார் நம்மவர்...*
*அட!, இதுகூட தெரியாதா. உனக்கு..' என்று இழிநிலைப் புன்னகை சிந்தினார்...(இழிநிலை-இளக்காரம்)*
*அதற்கு நம்மவர் எனக்குத் தெரியாது என்றார்..*
*நான் படித்ததெல்லாம் தமிழ் வழிக் கல்வியில், அதில் எதுவும் தெரியவில்லை எனில்தான் தவறு...'என்றார் நம்மவர்...*
*புன்னகை மாறாமல், மன்னிக்க வேண்டும் நண்பா!.,என்று இறங்கி வந்து ,*
*'புராக்காஸ்டினேஷன் ( PROCRASTINATION)னா.. தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது என்று பொருள் என்றார் அந்த வெளிநாட்டு நண்பர்...*
*பொதுவாக மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை...!*
*எல்லாம் தெரிந்த மேதாவி என்று தங்களை காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை...!!*
*அறிவு தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை...!!!*
*இந்த உலகில் எவ்வளவோ நிகழ்வுகள் நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ''தெரியாததை, தெரியாது'' என்று ஒப்புக்கொண்டால், வாழ்க்கைப் பயணம் சுமுகமாக அமையும்...!*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…
No comments:
Post a Comment