Saturday, January 1, 2022

*அதிசய விநாயகர்...!!*

 

☸️☸️☸️🛕🛕🛕☸️☸️☸️
*அதிசய விநாயகர்...!!*
ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. அதுபோல தான் இந்த வரசித்தி விநாயகர் கோவிலில் ஒரு அதிசயம் நடக்கிறது. வாங்க அந்த கோவிலை பற்றியும், அந்த அதிசயத்தை பற்றியும் பார்க்கலாம்.....!
🌊 500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு இந்த அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகர் கிணற்றில் சுயம்புவாக தோன்றினார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.
🌊 இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரும் ஒரு திருவிளையாடல் மூலம் இந்த அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.
*விநாயகரின் மகிமை!*
🌊 இந்த விநாயகருக்கு கிணற்றுக்குள்ளேயே சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். இன்னும் நம்மை அதிசயக்க வைக்கும் நிகழ்வாக காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம்.
🌊 கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் சிலைக்கு பொருந்தவில்லையாம்.
☸️☸️☸️🛕🛕🛕☸️☸️☸️
********************************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...