"பேன்ட பீயை இடுப்பில் கட்டிக் கொண்டே இருப்பது தான் நாகரீகமா அந்த நாகரிகமே எனக்கு தேவை இல்லை" என்ற ஒரு வசனம் ஏதோ படத்தில் பார்த்ததாக ஞாபகம்.
என்று பெண்கள் சானிடரி #நாப்கின்ஸ் உபயோகப்படுத்த துவங்கினார்களோ அன்றே கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்னு ஆரம்பித்து #கர்ப்பப்பை_புற்றுநோய் முதல் குழந்தை பெற்றுக் கொள்வதே அதிசய காரியம் என்ற நிலை வரை சென்றுவிட்டது இன்றைய மெத்த படித்த இளையதலைமுறை.
ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே உபயோப்படுத்தபட்ட #சானிட்டரி நாப்கின்ஸ் இன்று இளம் பெண்களிலிருந்து வயதானவர்கள் வரை சர்வசாதாரணமாக அதன் விளைவு தெரியாமல் எல்லா நேரங்களிலும் உபயோப்படுத்தபடுத்தும் நிலைமையில் இருக்கு, தற்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சியாக குழந்தைகள் உபயோப்படுத்த கூடிய #டையபர்ஸ்.
குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போழுது குழந்தைகளுடைய மல ஜலம் பெற்றோர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது ஆனால் தற்சமயம் ரொம்ப மாடர்னா இருக்க கூடிய இளம்வயது தாய்மார்களோட சௌகரியத்திற்க்காக பகல், இரவு என எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்கும் போழுதே குழந்தைகள் டையபர்ஸ் அணிந்தபடியே இருக்கும் சூழ்நிலையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
உடல் வெளியோற்றிய உடனடியாக அப்புறபடுத்த வேன்டிய கழிவு பொருட்களை குழந்தைகள் 2 முதல் 3 மணி நேரம் தனது உடல் உறுப்பு கூடவே ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் டையபர்ஸால் ஈரத்தன்மை மட்டுமே உறிஞ்சப்படுகிறது ஆனால் அதிலிருக்ககூடிய கிருமிகள் உடம்பில் பட்டு அதன் பாதிப்பு நிச்சயமாக குழந்தைக்கு ஏற்படுகிறது என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதே கிடையாது.
கழிவுப் பொருட்களுடைய பாதிப்பு மட்டுமில்லாமல் நாப்கின்ஸ் மற்றும் டையரில் உபயோகிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகள் வழியாக உள்ளே சென்று ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மறந்துவிடுகிறோம்.
குழந்தைகளுக்கு போடக்கூடிய டையபர்ஸ்ல பிதலேட்(PHTHALATE) என்ற நச்சு இரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக டாக்சிக் லிங்க் என்ற இணையதளம் தெரிவிக்கிறது. (பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களிலும் இது பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது)
இந்த நச்சு இரசாயனப் பொருள் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது, இது பிளாஸ்டிக் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
#டயபடீஸ், #இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாடுகள், #மார்பக_புற்றுநோய், #உடல்_பருமன், வளர்சிதை மாற்றக் குறைபாடு, #நோய்_எதிர்ப்பு_சக்தி குறைபாடு, சிறு குழந்தைகளுக்கு கவனமின்மை, IQகுறைதல், #ஹைப்பர்_ஆக்டிவிட்டி, சமூகத்தோடு இணைந்து வாழ இயலாமை, #நரம்பு_மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், #ஆஸ்துமா, சுவாசப் பாதை தொற்றுகள், ஆண்மை குறைவு, #விதைப்பை_புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை பாதிக்கபடுகின்றனர்.
இத்தகைய ஒரு கொடிய நச்சுப் பொருளை அதாவது புற்றுநோய் காரணியை குழந்தைகளுக்கும் கொடுத்து நாமும் சுமந்து திரிகிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை இதுவே இன்றைய மாடர்ன் டெக்னாலஜி பெற்றோர்களின் சாதனை.
தயவுசெய்து அதி அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் சானிடரி நாப்கின் மற்றும் டையபர்ஸை தவிர்த்து நோய்களையும் தவிர்ப்போம்.
"நோயற்ற வாழ்வே சிறந்த வரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள், தங்கள் குழந்தைகளுக்கு அந்த வரத்தை தந்தருளுங்கள்".
No comments:
Post a Comment