Friday, January 14, 2022

மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களை, அனைவரும் பகிர்ந்து கொள்வோம்.

 🙏🙏🙏தாய்த்தமிழின் புதல்வர்களாய், தரம்தரமாய்த் தமிழ்வளர்த்து , தன்மானத்துடன் வெகுமானங்கள், பலக்கண்டு வருவதோடு, தமிழினத்திற்கு என்றுத், தரணியில் தனியிடம் வென்று வரும் தகைசார்ந்தோர் அனைவருக்கும், இனிய நற்காலை வணக்கத்துடன், வானுரை வள்ளுவம் எனும் வற்றாதத் தமிழ்மறைதந்த பொய்யாமொழியான், புத்துலகச்சிற்பி, ஆசான் வள்ளுவனின், அரியநல் பிறந்தநாளும், கால்நடையாளர்களான நமக்காவே ,அல்லும்பகலும் அயராது உழைத்து ,கால்நடைகள் எனும் பெயரில், கண்ணியத்துடன் கடமையாற்றிவரும், மாடுகளுக்கானப்பொங்கலும் இணைந்துவரும் இன்றையத்திருநாளில், அனைவருக்கும் வாழ்த்துக்களை , ஆவலுடன்பகிர்ந்து கொள்கின்றேன். உலகமொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் பெற்று, உலகப்பொதுமறையாய் உயர்ந்து, தமிழினத்தின் பெருமைகளைத் தரணியளவில் உயர்த்தியோனாம் , தமிழ் இறைவன் பிறந்தநாளை, உலகத்து மாந்தர் அனைவரும் உயரியச், சிறந்தநாளாய்க்கொண்டாடிடவேண்டும். ஓரடியில் உலகளந்த வாமணன்போல் வையகத்தில் , முக்கால் அடி அதிகம் கொண்டு, முப்பாலில் உலகளந்தான், முத்தமிழ்த்தாயின் முதல் மகனாய், இறைநிலையில் மறைதந்து.  உழவனின் உயிர்நண்பர்களான மாடுகளுக்கும் உரிய நல்லிடம் அளித்திட எண்ணிய மனிதகுலமும் மாட்டின் பெருமை உணர்த்திடவே, இரண்டாம் நாளை அவைகளுக்கு அளித்தது, ஈடற்ற மாட்டுப்பொங்கல் எனும் பெயரில்.    மாடு மேயத்தலைக் கேவலம் என்றார், மனிதகுலத்தின் மாண்பறியாதோர் பலரும்,மாடு மேய்ப்பவர்கள்தான், தங்கள் மாடுகளுடன் சேர்ந்து, மனிதத்தையே மேய்த்துக்கொண்டிருக்கின்றனர் எனும் மாபெரும் உண்மை அறிந்திடாமல். உயர்நிலையில் நமக்காக, நாளும் மாடாய் உழைத்து ஓடாயத்தேய்ந்து, தியாகம் எனும் திகட்டாத சொல்லுக்கும , இலக்கணமும் ஏற்புடன் கண்டுவரும், உயிர்காத்து பாலளிக்கும், உன்னதமான மாட்டினத்தை, " உயர்தினை என்றிடாமல் அஃறினை என்றோமே"‼️ இது அவணியிலே நம்மை நாமேத்தாழ்த்திக்கொண்டிருக்கும் பாதகச் செயலல்லவோ ‼️எனவே இன்றையப்பொங்கல் தொடங்கி எந்நாளும் பின்னாளில், ஏரில் நடந்து சோறுபோடும், எருதுகளும் பசுக்களைப்போல், எருமைகளுடன் என்றென்றும், நாம் வணங்கிடும் நானிலத்து, நிரந்தர தெய்வங்களே என்று, இந்நாளில் உணர்ந்திடுவோம். அனைவருக்கும் உரித்தான மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களை, அனைவரும் பகிர்ந்து கொள்வோம், சாதி, சமய வேறுபாடுகளின்றி, ஆசான் வள்ளுவனின் பிறந்த நந்நாள்வாழ்த்துக்களுடன், ஒருவருக்கொருவர் உயர்ந்த உள்ளத்துடன்.🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...