Monday, January 17, 2022

திமுகவினை ஆட்சியில் அமரவைத்தது அவர்தான்.

 தனக்கு பின்னும் எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு விட்டு சென்ற நல் ஆத்மா

மருதூர் கோபாலமேனன் ராமசந்திரன் தனிபிறவிக்கு இன்று பிறந்த நாள்
வெறும் நடிகராக அறிமுகமான அவர்தான் திமுகவின் முகமானார்
அந்த முகத்து பின்னால்தான் அண்ணா, கருணாநிதி என எல்லோரும் பதுங்கி கொண்டார்கள்
தன் பலம் தெரியா யானையாக இருந்தார் அந்த ராமசந்திரன்
ஆம் அவர் நாத்திகம் பேசவில்லை பிரிவினைவாதம் பேசவில்லை என்பதால் அவர் கொண்டாடபட்டார் அவரின் நிழலில் இந்த நாகங்கள் வளர்ந்தன‌
1967ல் திமுக ஆட்சிக்குவர முக்கிய காரணம் அவர் சுடபட்டது, எம்.ஆர் ராதாவின் அந்த முட்டாள்தனமான முன்கோபமே திமுக ஆட்சிக்கு வர உதவிற்று
திமுகவினை ஆட்சியில் அமரவைத்தது அவர்தான்
அதன் பின் தமிழகம் கண்ட அலங்கோலத்தை உணர்ந்து தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி தனிகட்சி தொடங்கி காட்சிகளை மாற்றியதும் அவர்தான்
நிச்சயம் தனிகட்சி அவரின் விருப்பம் அல்ல காமராஜரோடு ஒட்டவே விரும்பினார்
ஆனால் அவரை சேர்க்காமல் காமராஜர் செய்த தவறே இங்கு காங்கிரஸ் காலாவதியாக பெரும் காரணம்
வேறு வழியின்றிதான் தனிகட்சி கண்டார்
சந்தேகமில்லை அவர் திமுகவில்தான் வளர்ந்தார், ஆம் அர்ஜூனனும் துரியனும் ஒன்றாகத்தான் கங்கை கரையில் வளர்ந்தார்கள்
ராமசந்திரன் இல்லையென்றால் தமிழகம் இப்பொழுது
குட்டி ஆப்கன் குட்டி பாகிஸ்தான் குட்டி முல்லைதீவு ஆயிருக்காதா என்றால் நிச்சயம் ஆகியிருக்கும்
முள்ளிவாய்க்கால் போல அடிக்கடி இங்கு மொத்தமாய் ரத்த ஆறு ஓடியிருக்கும்
சண்டாள நாத்திக கோஷ்டி காஷ்மீரிய தீவிரவாத இயக்கம் போல குடும்பமே ஏரியாவுக்கு ஒன்றாக ஆண்டு கொண்டிருக்கும்
குறைந்தபட்சம் மேற்கு வங்கம் போல் நாசமாயிருக்கும்
திமுக எனும் நாத்திக தேசபிரிவினைவாத ரவுடிகளின் கூடாரம் இருக்குமளவும் இங்கு ராமசந்திரன் வாழ்வார்
ராமசந்திரன் தமிழகத்தை காத்து கொண்டே இருப்பார்
திமுக அழியும் வரை அவரும் இங்கே வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்
இது தெய்வத்தின் விளையாட்டு நம்புகின்றீர்களோ இல்லையோ .
May be an image of 3 people and text that says 'Narendra Modi @narendra... 41m பாரத ரத்னா எம் .ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...