சமீப காலமாக நம்மிடம் கவுன்சிலிங் வரும் பெண்களிடம் தொடர்ந்து ஒரு விஷயத்தை கவனிக்கிறேன்.
அதுதான் Self sabotaging!
கடந்த காலத்தில் வியாபார ரீதியாகவோ அல்லது பர்சனல் வாழ்க்கையிலோ செய்த தவறுகளை நினைத்து தங்களைத் தாங்களே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாழாக்கிக் கொள்ளுதல்.
நம்மில் பலரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான ஒரு ஸ்பேஸை நிச்சயம் கடந்து வந்திருப்போம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கடக்க முடியாமல் தேங்கி விடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது !
தவறே செய்யாத ஜீவன் என ஒன்று இந்த பூமியில் இதுவரை பிறக்கவும் இல்லை , இனி பிறக்கப் போவதும் இல்லை....மகாத்மா என நம்மால் கொண்டாடப் படுபவர்களும் இதில் அடக்கம்!
அந்த தவறுகளில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டியது.
அமெரிக்காவில் பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பெண் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் படித்தேன். அதில் அவர் நாள்தோறும் தன் சிறு மகனிடம்...நாம் பிள்ளைகளிடம் how was your day என்று கேட்பதைப் போல how many mistakes you made today? என்று கேட்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறியிருந்தது எனக்கு ஆச்சரியத்தையும் தவறுகளைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தையும் அளித்தது!
நீங்கள் எத்தனை தவறுகள் செய்திருக்கிறீர்களோ வாழ்வில் அத்தனை புதிய முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் . எனவே இனியும் கடந்த கால தவறுகளுக்காக வருந்துவதை விட்டு....Pat on your back for making mistakes and learning new things!
No comments:
Post a Comment