Friday, January 6, 2023

காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி..

 படிச்சிட்டு பதறாதீங்க.. உஷாரா இருங்க..

62 வயது இந்திய தொழிலாளி. கேரளாவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய தேசத்துக்கு சென்றவர்.
உழைத்து உழைத்து வீட்டுக்கு பணம் அனுப்பி இருந்தார். வாரிசுகள் நன்றாக வளர்ந்தனர். நல்ல வீடும் கட்டப்பட்டது
ஆனால் கடன் தொல்லை மட்டும் ஓயவே இல்லை. இதனாலேயே மீண்டும் மீண்டும் அரபு தேசத்திலேயே உழைத்தார்.
இரு தினங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்து விட்டார். அவரது உடலை பிறந்த மண்ணுக்கு அனுப்பும் வேலைக்கு தொடர்புடையவர்கள் முன் வராததால் வழக்கம்போல சமூக நல ஆர்வலர் ஒருவர் மேற்கொண்டார்.
நடைமுறைப்படி இறந்த தொழிலாளி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர்கள் "சடலத்தை இங்கே கொண்டு வர வேண்டிய தேவையில்லை அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டும் இதே பதில்தான் கிடைத்திருக்கிறது சமூக ஆர்வலர்க்கு.
வேறு வழியின்றி அவர் உள்ளூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவர்களும் அந்த குடும்பத்தினரை அழைத்து பேசியதற்கு கிடைத்த ஒரே பரிகாரம், இறந்தவரின் உடல் தங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாகவே எழுதிக் கொடுத்ததுதான்.
தகவல் பரவியதில் இறந்தவரின் தங்கை குடும்பத்தினர் உடனே வாங்கி அடக்கம் செய்ய முன் வந்திருக்கின்றனர்.
இந்த விவரங்களை அந்த சமூக ஆர்வலரே தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
இருப்பினும் இறந்தவரின் பெயர் அவர் குடும்பத்தினர் விவரங்கள் சொந்த ஊர் போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இவருடைய இந்த முகநூல் பதிவு தான் தற்போது வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக பேசு பொருளாகி இருக்கிறது.
குடும்ப உறவோ, நட்போ நீங்கள் நன்றாக இருக்கும் போது உங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், நீங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார ரீதியாக தாழ்ந்து போனாலோ அல்லது மறைந்து போய் இனி உங்களால் ஒரு ரூபாய்க்கு பிரயோஜனம் கிடையாது என்ற நிலை வந்தாலோ அப்போதும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்தான் இதுவரை நீங்கள் பெற்று வந்த அன்பு உண்மையானது
இதைக் கூட உணராமல் தொடர்ந்து ஒரு வழி பாதையாகவே உங்கள் அன்பும் நம்பிக்கையும் போய்க் கொண்டிருந்தால், ஒரு பக்கம் நீங்கள் ஏமாளியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
இன்னொரு பக்கம் ஏமாளிகளுக்கு உதவி விட்டு, உங்களுக்கு நல்லதை நினைப்பவர்களுக்கு உதவாமல் போகிறீர்கள் என்றும் அர்த்தம்.
உங்களை பனங்காய்ச்சி மரமாக மட்டுமே பாவிப்பதால்தான் குடும்ப உறவுகளும் நண்பர்களும் மதிக்கிறார்களா என்பதை ஒரு முறையாவது சோதனைக்கு உள்ளாக்குங்கள்.
அவர்கள் தேவையை எதிர்பார்த்து நீங்கள் காத்திருக்கிற மாதிரி ஒரு நெருக்கடியான நிலையை சொல்லிப் பாருங்கள்.
"போடாத புண்ணியவதிதான் போடல, தினம் பிச்சை போடுகிற. ...வடியாளுக்கு என்ன கேடு?" என்ற கிராமத்து பேச்சு வழக்கு, எவ்வளவு அர்த்தம் வாய்ந்தது என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்
(முக்கிய குறிப்பு ஏராளமான ஃபாலோயர்களை பெற்று பிரபலமாக இருக்கும் வெளிநாடு வாழ் சமூக ஆர்வலர், தவறான தகவல்களைத் தர வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் தான் இந்த பதிவை போடுகிறோம்.)
நம் கற்பனைதான்..ஒருவேளை அரபு தேசத்தில் இறந்தவரின் பையில் இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் வைத்திருந்து அந்த தகவல் அந்த குடும்பத்திற்கு தெரிய வந்திருந்தால்..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...