Thursday, January 5, 2023

அனுபவங்களை அனுபவித்து கடந்து செல்வதன் மூலம் நம் இயல்பு தானாகவே தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.

 #எதையும் #எதிர்கொள்வோம்

நண்பர்களே...
வாழ்க்கை விசித்திரம் நிறைந்தது.சில பேருக்கு வாழ்க்கை பரமபத ஆட்டத்தில் எப்போதும் ஏணியில் ஏறுகிற மாதிரி ஏற்றமா கவே இருக்கும்.
சில பேருக்கு அடிக்கடி பாம்பு கடித்து கீழ் நோக்கி இறங்குமுகமாகவே இருக்கும்.
நண்பர்களே...
நம்மில் யாருமே சில்வர்ஸ்டார் ஸடெல்லோன் கிடையாது...
யதார்த்தத்தில் நம் அனைவருக்குமே "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" ங்கற மாதிரி ஒன்று மாற்றி ஒன்று என தொல்லைகளை சந்திக்கும் மனிதர்கள்தான்.
நம்மை மிஞ்சிய மனிதர்களையே நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில் இயற்கையை வெல்வது எப்படி சாத்யம்?
அதை ஒருக்காலும் நம்மால் வெற்றி கொள்ள முடியாது.
அப்படியானால் அது துரத்த துரத்த பயந்து போய் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது தானா?.
யார் சொன்னது அப்படி? நாமாக பயந்து போய் ஓடிக் கொண்டே இருக்கிறோம்!.
இயற்கை நம்மை எதிர் கொண்டு கடந்து போக சொல்கிறது. அவ்வளவு தான்.
நாம் நமது அறிவை கொண்டு எதையும் எதிர் கொள்ளவேண்டும் அப்போது தான் நாம் அடுத்த நிலைக்கு உயர முடியும்.
ஆனால் நாம் நம் அறிவை உபயோகித்து எதையும் எதிர் கொள்வதை விட அதில் இருந்து எஸ்கேப் ஆகவே முயற்சி செய்கிறோம்.இதுவே நாம் செய்யும் மாபெரும் தவறு.
வருடா வருடம் பரீட்சை வரவே செய்யும்.அதை எதிர் கொண்டு பாஸ் பண்ணி அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
அது தான் நமது கடமை.
எதையும் எதிர்கொள்ள தயங்கி தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது சரியான வாழ்க்கை முறை ஆகாது.
இப்படி எதையும் எதிர் கொண்டு வாழ்க்கையை எளிமையாக நடத்த நம் அறிவை பயன் படுத்தி வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை.
வாழ்க்கை பல்வேறு விதங்களில் நம்மை சோதிப்பது உண்மை தான்.
அதே சமயம் அதை எதிர் கொள்வதற்கான அறிவையும் இறைவன் நமக்கு அளித்துள்ளான்.
ஆனால் நாம் என்னவோ எப்போதும் போல எல்லாம் எனக்கு தெரியும் என்று எஸ்கேப் ஆவது எப்படி என்பதிலேயே நமது அறிவை உபயோகிக்கிறோம்.
எதையும் தவறாக புரிந்து கொண்டு எதிர் கொள்வதை விட எஸ்கேப் ஆவதே புத்திசாலித் தனம் என்கின்ற ஈகோ நம் இயல்பில் இருக்கிறது.
நம் இயல்பை அதனோடு போராடி நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நமது பிரச்சினை களை எதிர் கொள்வதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் நம் இயல்பை மாற்றும் வல்லமை மிக்கவை.
நமக்கு அனுபவங்கள் தரப் படுவதே அதற்குத் தான். அனுபவங்கள் இல்லாவிட்டால் எப்படி இயல்பை மாற்ற முடியும்.
நமக்கு ஏற்படும் சிக்கல்கள் நமக்கு அனுபவங்களை தருகின்றன.அந்த அனுபவங்களை அனுபவித்து கடந்து செல்வதன் மூலம் நம் இயல்பு தானாகவே தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.
கடைசி வரை எந்த தேர்வையும் எழுதாமல் வயிற்று வலி ,தலைவலி என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால் நம்மால் இந்த கிளாசில் பாஸ் பண்ண முடியாது ஒரு வருடத்தைஇழந்து விடுவோம்.
வாழ்க்கையிலும் இப்படி இருந்தால் ஒரு பிறவியையே வீணாக்கி விடுவோம். இதை புரிந்து கொண்டால் நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...