Thursday, January 5, 2023

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

 தனது மானம் பெரிதல்ல அடுத்தவர் உயிர்தான் பெரிது என இடர் நேரத்தில் தனது வேட்டியை அவிழ்த்து காண்டூர் கால்வாயில் தத்தளித்த இரண்டு வன பணியாளர்களை காப்பாற்றிய 60 வயது விவசாயி கார்த்திகேயன்.

நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கே மலைப்பகுதி அடிவாரத்தில் பிஏபி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து தத்தளித்து வருகிறது. இத்தகவல் வனத்துறைக்கு செல்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை குழு ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டயன் செட்டு மூலப்படி அருகில் தண்ணீர் மூழ்கியும் மிதந்து வரும் யானையை தடுத்து மீட்க முயற்சிக்கின்றனர்.
அப்போது கீழே தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி கார்த்திகேயன் அவரும் சம்பவ இடத்திற்கு வருகிறார். அப்போது யானையை மீட்கும் ஈடுபட்ட மூன்று வனத்துறை பணியாளர்கள் எதிர்பாராத விதமாக மூவர் கால்வாய் நீர் ஓட்டத்தில் அடித்து செல்லப்படுகின்றனர். கிழக்கே சுரங்க கால்வாய் உள்ளது . விபரிதம் புரிந்து தான் கட்டிய வேட்டியை அவிழ்த்து ஒரு முனையை பிடித்து வேகமாக ஓடி கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வனபணியாளர் முன் வீசுகிறார். அவர் வேட்டியை பிடித்து மேலே ஏறிவந்து விடுகிறார்.
அடுத்து கீழே கிடந்த மரக்குச்சியை எடுத்து வனவருடன் பைக் கில் பின் ஏறி அமர்ந்து முன்னே தண்ணீரில் அடித்து செல்லும் இருவரை காப்பாற்ற பைக்கில் வேகமாக சென்று அவர்கள் முன் மரக்குச்சியை நீண்டுகின்றனர் ஒருவர் மட்டும் பிடித்து ஏறி உயிர் தப்பிவிடுகிறார்.
மற்ற ஓரு வனவர் சுரக்கப்பாதை வழியாக அடித்து செல்லப்பட்டு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டார். அவர் உடல் நேற்று மீட்கப்பட்டது. கால்வாயில் விழுந்த யானையும் இறந்துவிட்டது. அதுவும் மீட்கப்பட்டுள்ளது.
தனது அறுபது வயதில் இருமனித உயிர்களை காப்பாற்றிய விவசாயி கார்த்திகேயன் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.
வாழ்த்துங்கள் இந்த மாமனிதரை....
May be an image of 1 person, outdoors and tree

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...