Monday, January 9, 2023

தமிழக மக்கள் ஆராய வேண்டும்.

 உதயநிதியை அடுத்த திமுக தலைவராகவும், அவருக்குப்பின் அவர் மகன் உதயன் இன்பநிதி தலைவராகவும் வருவதாக, இந்த கொத்தடிமைகள் கட்சி தம்பட்டம் அடித்து கொண்டாதன் பலனாக, பொது வெளியில், இன்பனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய இன்னொரு வீடியோவும் நேற்று வெளியானது. முதலில் படங்கள், நேற்று வீடியோ.

ஒழுக்கமற்ற குடும்பம் ஒன்று, ஒழுக்கமற்ற வாரிசுகளை வைத்து எவ்வாறு ஒரு மிகப்பெரிய கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது என்பதை, தமிழக மக்கள் ஆராய வேண்டும்.
1,000 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்து பழகிய ஒரு நிலபரப்பு மக்கள் (இனம் என்று சொல்ல முடியாது), இன்னும் அடிமைகளாக, ஒரு அதிகார மையத்தின் கூலிப்படைகளாக, மனசாட்சியைப் புதைத்து வைத்துவிட்டு, தன்னலம் போற்றும் அசிங்கங்களாக இருப்பது, 21 ஆம் நூற்றாண்டின் அதிசயம்.
இருப்பினும், இந்த நேர்மையற்ற அதிகார அமைப்பை, இன்றளவில் மக்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சன உண்மை.
இதற்குப் பல காரணங்களும், வரலாற்றுப் பாதைகளும், இந்தியாவின் அரசியல் பின்னனியும் இருந்தாலும், முக்கிய காரணங்கள் மூன்று.
1. இந்திய நீதித்துறையின் செயல்பாடு.
2. இந்தியாவின் ஊழல் மிக்க அரசு IAS, IPS, IRS இயந்திரம்.
3. இந்தியாவின் மத்திய அரசாக ஆட்சியிலிருக்கும் பாஜக.
இந்த மூன்றில் 1, 2 ஆகிய இரண்டையும் மக்கள் தொட முடியாது.
வெள்ளைக்காரன் வெளியேறியபோது, இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம், இந்த இரு தரப்பினரும்; மக்கள் ஆட்சிக்கு அப்பாற்பட்ட உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளனர்.
மக்களிடம் எஞ்சியுள்ளது, மத்தியில் அரசாட்சியை வைத்திருக்கும் உரிமை மட்டுமே.
இந்த நிலை வந்தது ஏன், எதனால், எப்படி, என்று விவரிக்க பல நூறு பக்கங்கள் தேவைப்படும். ஆகையால் இதை இங்கே தவிர்க்கிறேன்.
பாஜகவின் செயல்பாடுகள் முழுமையாக திருப்தி அளிக்க வில்லை யென்றாலும், இந்துக்கள் பாஜகவை விரும்புகின்றனர். தேசப்பற்று மிக்க கட்சி என்று கருதுகின்றனர். மோடி எனும் தனி நபரை முழுமையாக நம்புகின்றனர்.
ஆனால் இப்படியே போனால் மோடி, இந்து ராஜ்யம் நிறுவி விடுவார் என்று இந்தியாவின் 20% இஸ்லாமியர்கள் நினைப்பதாலும், 10‰ விழுக்காடு கிறுத்துவர்கள் இத்தாலி காங்கிரஸ்தான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று எண்ணுவதாலும், மத்திய அரசு, ஆட்சியில் இருப்பதற்கு சிரமப் பட்டுக்கொண்டிருக்கிறது.
70%:30% என்றால், பாஜக ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
பிரச்சினைகள்:
1. 70% இந்துக்களில் 70% விழுக்காட்டினரே வாக்களிக்கச் செல்கின்றனர்.
70%*70% = 49%. ஆகையால், தேர்தல் போட்டிகள் 49% க்கும் 30% க்குமே.
2. இப்பொழுதுள்ள 70% இந்துக்களும் சிறிய குடும்பங்களை விரும்புவதால் தேர்தலுக்குத் தேர்தல் இந்த 49% உம் சுருங்கி வருகிறது.
3. அரசியல் களத்தில் 30% சிறுபான்மை ஒற்றுமையாக களம் காண்கிறார்கள்.
4. 30% சிறுபான்மை ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர்கள் ஆதரவு தரும் குடும்ப ஊழல் கட்சிகள், பல மாநிலங்களில் திமுவைப் போன்று பாஜகவை விட பலமாக உள்ளனர்.
தமிழகத்தில், திமுக எனும் இந்து விரோத கட்சி ஆட்சி செய்வதற்கு:
இந்துக்களை சாதி வாரியாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் குறுநில மன்னர்கள் போல், அதிகார மையங்களை உருவாக்கி, குட்டையை குழப்பி, தாங்களும் நாட்டை கொள்ளையடித்து, குறுநில அதிகார மையங்களையும், கூலிப்படைகளையும் கொள்ளையடிக்க விட்டு, கிட்டத்தட்ட இஸ்லாமியர் ஆட்சி காலத்துக்கு மக்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர்.
இதனால்தான், தமிழ் நாட்டு எதிர்க் கட்சிகள் பாஜகவை, இந்துத்துவா கட்சி என்று தொடர்ந்து தூற்றுவதும், பாலியல் காமுகர்கள் பாஜகவை இடித்துக்கொண்டே இருப்பதும், இந்து விரோதத்தை மூலதனமாக வைத்து அரசியல் செய்வதும், நடக்கிறது.
கருணா குடும்ப ஆட்சி, சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று அடிக்கடி பாதிரிகள் நினைவூட்டி வருவதற்கும் இதுதான் காரணம்.
இப்படியே போனால், 2024ல் பாஜக தோற்றுவிடும் என்பது என் கணிப்பு.
இந்த சரிவை சமாளிக்க பாஜக சில முக்கிய முடிவுகளை உடனே எடுக்க வேண்டும்.
1. வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தேர்தலில் கள்ள ஓட்டை ஒழிக்க, ராணுவத்தை வைத்து நடத்த வேண்டும்.
2. 2023 இறுதிக்குள், தமிழ் நாட்டின் ஊழல் குடும்ப வாரிசு ஆட்சியை டிஸ்மிஸ் செய்து கவர்னர் ஆட்சி கொண்டுவர வேண்டும்.
3. 2023ஐ ஊழல் ஒழிப்பு ஆண்டாக அறிவித்து, திமுகவின் ஊழல் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டும்.
4. நேர்மையான, இந்திய ஒற்றுமையை விரும்பும் இஸ்லாமியர்களுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும்.
5. தென்னாடுகளில், பாஜக பொதுத் தொடர்பு சாதனங்களையும், கட்சி கட்டமைப்புக்களையும் உடனே வலுப்படுத்த வேண்டும்.
செய்வீர்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...