Thursday, January 5, 2023

உலகின் மிகப்பெரிய ஆலமரம் 🌳

நீங்க பார்ப்பது காடு இல்லை.
ஒரு மரம்.🌳
ஆம். உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் என்ற கின்னஸ் சாதனை படைத்த மரம்தான் இது.
இதன் பெயர் அவுரா.🌳
கொல்கத்தாவின் அவுரா பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள இம்மரம் கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரம்.🌳
திருத்தம்: ஆலமரம் உள்ள இடத்தில்தான் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது.
சுமார் 270 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஒற்றை மரத்தோட்டம், கி.பி 1786-ல் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்த கர்னல் அலெக்சாண்டர் கிட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
உலகிலேயே பரப்பளவில் மிக அதிக இடத்தினைக் கொண்டது
இந்த ஆலமரம்.🌳
இந்த மரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் கிழக்கு திசையிலேயே வளர்ந்துகொண்டு செல்கிறது.
தூரத்திலிருந்து பார்க்கும்போது அடர்ந்த காடுபோல் தோற்றம் அளிக்கிறது.
அருகே சென்று பார்க்கும் போதுதான் இது ஒரே ஒரு மரமாக இருப்பது தெரிகிறது.
இந்த மரத்தை பார்ப்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர்.
ஆலமரத்தின் விழுதுகள் பல இடங்களிலும் வேரூன்றி இருந்தாலும் முதல் முதலாக இருந்த தண்டுப் பகுதி இப்போது இல்லை.
நடுமரம் இல்லாமல் விழுதுகளால்தான் இந்த மரம் நிற்கிறது.
இரண்டு மிகப்பெரிய புயல்களில் சிக்கிய இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதை 1925 ஆம் ஆண்டு அகற்றி இருக்கிறார்கள்.
இப்போது, மண்ணில் புதைந்து மரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டும் 3618.
மொத்த மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 மீட்டர்.
அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது இந்த ஆலமரம்.🌳
மரம் வளர்ந்து கொண்டே இருப்பதால் இதை ‘நடமாடும் மரம்’ என்று அழைக்கிறார்கள்.👍🌳
நாம் ஒவ்வொருவரும் மரம்
வளர்ப்போம்... நன்றி!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...