மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். 1994 பேட்ஜ் IAS அதிகாரி. 27 வருட கறைபடியாத பணிக்கு சொந்தக்காரர். படிக்கும் போது மூன்று முறை கபாடி போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்.
தர்மபுரி ஆட்சியராக பணிபுரிந்த போது தன் முத்திரையை பதித்தார்.
2015 ம் வருடம் அலட்சியத்தால் ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்பை தன் திறமையால் கட்டுப் படுத்தினார்.
அப்துல்கலாம் ஜெயலலிதா கலைஞர் ஆகியோரின் இறுதிச் சடங்குகளை அரசு சார்பில் யாதொரு குறையில்லாமல் நடத்தி முடித்தார்.
குறிப்பாக பதட்டமும் பரபரப்பும் நிறைந்த கலைஞரின் இறுதிச்சடங்கை பொறுப்பும் உறுதியும் நிறைந்த ஒரு மகளைப் போல மிக குறைந்த நேரத்தில் சிறு குறையுமின்றி நடத்தி முடித்தார்.
பேராளுமை மிக்க கலைஞர் என்ற மனிதர் ஆற்றிய சமூகப்பணிகளை மனதிற்குள் நிறுத்தி நெகிழ்ந்து தன் இறுதி கைப்பிடி மண்ணை குழிக்குள் போட்ட அந்நொடியில் மக்கள் மனதில் கலைஞரின் வாரிசாகவே தெரிந்தார்.
அவரின் நேர்மை, அறிவுக்கூர்மை, திட்டமிடல், ஆளுமைப்
பண்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீளவும் தமிழக பணிக்கு வருவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஊராக வளர்ச்சி துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
வாழ்த்துக்கள்
சகோதரி.
No comments:
Post a Comment