Wednesday, February 1, 2023

வீட்டில் மற்றும் பூஜை அறையில் நாம் தெரியாமல் செய்யும் இந்த சில தவறுகள் கூட துரதிர்ஷ்டத்தை கொடுக்கலாமாம்!

 *தெரிந்தோ! தெரியாமலோ! நாம் வீட்டில் மற்றும் பூஜை அறையில் செய்யக்கூடிய சில தவறுகள் நமக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. வீட்டின் பூஜை அறை என்பது நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அறையாகவும் இருக்கிறது. நமக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நேராக பூஜை அறைக்கு தான் செல்கிறோம். ஒரு சில சாஸ்திர விதிமுறைகளை நாம் தெரியாமல் மீறி தவறு செய்து விடுகிறோம். இதனால் உண்டாகும் கெடுபலன்களை அனுபவிக்கவும் செய்கிறோம். இதனை தவிர்த்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம்? வீட்டில் செய்யக்கூடாத தவறுகள் என்ன? இதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்*

*நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரி வைத்திருந்தால் மிகவும் நன்மையான விஷயம் தான். பஞ்சுத் திரியால் தீபம் ஏற்றினால் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆனால் பஞ்சு திரியை திங்கள்கிழமை அன்று கைகளால் தொடக் கூடாது என்பது சாஸ்திர நியதி. திங்கள் கிழமையில் பஞ்சு திரியை கைகளால் தொடுவது அவ்வளவு நல்லதல்ல*
*வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு இது தான். வீட்டின் வாசலில் கோலம் போட்டு விட்டு, விளக்கு ஏற்றி விட்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீடு தான் முதல் கோவில் என்பதை மறந்து விடாதீர்கள். வீட்டில் கோலம் போடாமலும், விளக்கு ஏற்றாமல் கோவிலுக்கு செல்வதால் உங்களுடைய பிரார்த்தனைகள் பலிக்காமல் போக வாய்ப்புகள் உண்டு*
*வீட்டில் சாமி படத்திற்கு நிவேதனம் வைக்கும் பொழுது, எச்சில் பட்ட பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்கென்று தனியாக ஒரு பாத்திரத்தை வைத்திருப்பது சிறந்தது. அப்படி நீங்கள் எவர்சில்வர் பாத்திரத்தில் நிவேதனம் படைக்கும் பொழுது அப்படியே உணவை வைக்கக்கூடாது. அடியில் ஒரு வாழை இலையை வைத்து அதில் நிவேதனத்தை படைப்பது முறையாகும். எச்சில் பட்ட எவர்சில்வர் பாத்திரத்தில் நேரடியாக சுவாமிக்கு நிவேதனம் படைப்பது துரதிர்ஷ்டத்தை தரும்*
*நாம் நம் வீட்டில் சுவாமி படங்களுக்கு சாற்றப்படும் பூக்களை உலரும் வரை அப்படியே விட்டுவிடக் கூடாது. அது போல் காய்வதற்கு முன்பே எடுத்து விடவும் கூடாது. மலர்கள் காயும் முன்பு எடுப்பதும், காய்ந்து சருகாகும் வரை படங்களில் விட்டு வைப்பதும் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். காயும் நிலையில் இருக்கும் பூக்களை பவ்யமாக அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் அல்லது செடிகளில் போட்டுவிட வேண்டும். இதனை குப்பையில் போடுவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்*
*பூஜையில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளி விட்டு தான் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதனால் வெற்றிலை வைக்கும் பொழுது காம்பை கிள்ளி விட்டு வையுங்கள். வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. வெற்றிலையுடன் பாக்கு மற்றும் பூ கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெற்றிலையில் தவறு செய்தால் பூஜை நிறைவு பெறாது என்கிற ஐதீகம் உண்டு. எனவே வெற்றிலையை வைக்கும் பொழுது கவனத்துடன் வையுங்கள்.
May be an image of 2 people and text
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...