Wednesday, February 1, 2023

பிள்ளைகளை கண்டிக்கவேண்டியஇடத்தில்கண்டிக்கணும்.

 காட்டில் ஒரு சிங்கம் மரத்தடியில் இளைப்பாரிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அந்த மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு குட்டியானது மரத்திலிருந்து இறங்கி அந்த சிங்கத்தை சிங்கத்திற்கு தெரியாமலேயே அதன் உடம்பை தொட்டுவிட்டு ஓடி சென்று ஏறிக்கொண்டு கைதட்டி சிரித்தது இதை கவனித்த சிங்கம் அதை கண்டும் காணாமல் இருந்தது அந்தக் குரங்கு குட்டிக்கு ஒரு சந்தோசம் பாட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்தை நாம் தொட்டுவிட்டோம் அது நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை நாம் தப்பித்து மரத்தில் ஏறி விட்டோம் என்று நினைத்து மிகவும் சந்தோஷம் அடைந்தது மீண்டும் சில முறை அவ்வாறே அந்த குரங்கு குட்டி செய்தது இதை கவனித்துக் கொண்டிருந்த இரண்டு நரிகள் சிங்கத்தை தொடச்செல்லும் அந்தக் குரங்கு குட்டியை நாம் வேட்டையாட வேண்டும் அதை ஒன்று நாம் பசியார வேண்டும் என்று தீர்மானித்து நரிகள் இரண்டும் குரங்கை பிடிப்பதற்கு காத்திருந்தது அந்த நேரத்தில் குரங்கு குட்டி சிங்கத்தை தொடுவதற்கு இறங்கி வந்தது அதை வேட்டையாட இரண்டு நரிகளும் பாய்ந்தது இதை கவனித்த சிங்கம் இரண்டு நதிகளையும் ஒரே அடியில் கொன்றது இதை கவனித்த குரங்கு கூட்டி கண்ணீர் வடித்து கதறியது அப்பொழுது சிங்கம் குரங்கு குட்டியை பார்க்க கூறியது குரங்கு நீ ஒன்றும் கவலைப்படாதே நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் காரணம் நீ என்னை தொட்டு விட்டு மரத்தில் ஏறி கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாய் மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆகையால் உன்னை நான் கொல்லவில்லை உன்னை நான் கொல்லப் போவதுமில்லை உன்னை கொள்வதென்றால் முதல் முதலாய் என்னை தொடுவதற்கு வரும் பொழுதே கொண்டிருப்பேன் ஆகையால் கவலை கொள்ள வேண்டாம் இன்று முதல் நான் உனக்கு நண்பன் என்று நினைத்துக் கொள் என்னிடம் விளையாடுவது போல் மற்றவர்கள் இடத்தில் விளையாடாதே எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அன்புடன் எச்சரித்தது சிங்கம் இதைக் கேட்ட அந்த குரங்கு குட்டி நம்மளுக்கு காட்டுக்கே ராஜாவாக இருப்பவர் நண்பர் ஆகிவிட்டார் இனி நமக்கு ஒரு கவலையும் இல்லை என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தது இது போல் தான் ஒவ்வொரு தாய் தந்தையரும் தனது பிள்ளைகளின் நலனுக்காகவே சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் சில தவறுகளை செய்யாமல் அன்புடன் கண்டித்தும் வருகின்றனர் இதை புரிந்து கொள்ளாமல் எந்த ஒரு பிள்ளையும் மேலும் மேலும் தவறுகள் செய்தால் மற்றவர்களால் தண்டிக்கப்படுவார் ஆகையால் ஒவ்வொரு பிள்ளைகளும் தனது தாய் தந்தையரின் சொல்பேச்சை கேட்டு நல்வழியில் செல்ல வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் அன்னை தந்தையரின் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு தாயும் தந்தையும் தனது பிள்ளைகள் தான் உலகம் என்று வாழ்கின்றனர் இறுதியில் அவர்கள் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை பிள்ளைகளுக்காகவே வாழ்வதும் பிள்ளைகளுக்காகவே சாவகம் மனிதராய் பிறந்த ஒவ்வொரு தாய் தந்தையரின் இறுதி நிலையாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...