Thursday, February 2, 2023

பி(ர) தோசம் - பி(ற)தோச எது சரி? மற்றும் அதன் விளக்கம்:

 இன்று "பிரதோசம்" என இடையின "ர" பயன்படுத்தி வருகிறோம். அது தவறு. வல்லின "ற" பயன்படுத்தி "பிறதோசம்" என குறிப்பிட வேண்டும்.

பிறதோசப் பூசை என்பது மனிதப் பிறவியில் ஏற்பட்டு விட்ட, ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்ற, ஏற்படப் போகின்ற தோசங்களையெல்லாம் (தோசம் = பாதிப்பு) அகற்றுவதற்குரிய பூசை (பூ+செய்) என்பது பொருளாகும்.
அதாவது மனித வாழ்க்கையில்,
விதியாலும், ஊழ்வினையாலும் பிறந்துவிட்ட தோசங்களையும், உலகியல் செயலால் பிறந்து கொண்டிருக்கின்ற தோசங்களையும்,
வருங்காலத்தில் ஊழ்வினையாலும், விதியாலும், மதியாலும் பிறக்கப்போகின்ற தோசங்களையும் வென்றிடுவதற்காக செய்யப்பட வேண்டிய பூசையே "பிறதோசம்" எனப்படும்.
அதாவது பிறந்து விட்ட தோசங்களையும், பிறந்துகொண்டிருக்கும் தோசங்களையும், பிறக்கப் போகின்ற தோசங்களையும் வெல்லுவதற்குச் செய்யக்கூடிய சிவபூசையே "பிறதோசம்" என்பார் .
No photo description available.
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...