Tuesday, February 7, 2023

விரதம் இருப்பது எப்படி?

 உண்ணா நோன்பு என்பது நம் உடலுக்குள் வாழும் நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எப்படி என்றால் அமாவாசை பவுர்ணமி எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறதோ அதுவரை சாப்பிடக்கூடாது. அடுத்து வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் அந்த திதி எப்போது தொடங்கி எப்போது முடிகிறதோ அதுவரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்றும் அது தொடங்கி முடியும் காலம் வரை நோன்பு இருக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி,வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். உண்ணா நோன்பு சமயத்தில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். ஏன் இந்த 5 நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்றால், உடலில் நன்மை பயக்கக் கூடிய நுண்கிருமிகளும் தீமை பயக்கக் கூடிய நுண் கிருமிகளும் இருக்கின்றன. தீமை பயக்கக்கூடிய நுண்கிருமிகள் சாப்பிட்டுவிட்டு ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் தான் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் மேற்கண்ட 5 தினங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கும். அதனால் அந்த நாட்களில் நிறைய உணவை சாப்பிடும். எனவே அவற்றை தடுக்கும் வகையில் அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். இந்த நாட்களில் நாம் உண்ணாவிரதம் இருந்து வந்தால் தீமை செய்யும் நுண்ணுயிர்களால் உண்டாகும் விஷக்கழிவுகள் இருக்காது. உடல் தூய்மையாக இருக்கும். இதற்கு தான் அந்த உண்ணா நோன்பு, கடவுளைச் சென்று அடைவதற்காக அல்ல. நம்முள் இருக்கும் உயிர்தான் கடவுளின் அங்கம். அந்த உயிரை காத்து நிற்கும் நம் உடல் ஒரு கோயில். அந்த கோயிலை தூய்மையாக வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டது தான் உண்ணா நோன்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...