Wednesday, February 1, 2023

இட்லி வேகும் நேரத்துக்குள்ள சூப்பரான ஒரு தக்காளி பாயா நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். இது ஆட்டுக்கால் பாயா இல்லன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. டேஸ்ட் அப்படி இருக்கும்.

 இட்லி தோசைக்கு என்ன தான் சட்னி, சாம்பார் நல்ல காம்பினேஷன் ஆக இருந்தாலும், அசைவத்தில் செய்யப்படும் சிக்கன் குருமா, மட்டன் குருமா, பாயா போன்றவைகள் எல்லாம் இருக்கும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தானே. அதுவும் அசைவ பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம். அசைவம் சாப்பிடாத நாட்களில் கூட தக்காளியை வைத்து இந்த பாயாவை செய்து விடுங்கள் போதும். அசைவம் இல்லை என்ற கவலையே இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த தக்காளி பாயாவை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தக்காளி பாயா செய்முறை விளக்கம்: தக்காளி பாயா செய்வது மிக மிக சுலபம். நீங்கள் இட்லி ஊற்றி வைத்து அது வெந்து வருவதற்குள்ளாகவே இந்த பாயாவை செய்து முடித்து விடலாம். இதற்கு முதலில் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 4 பெரிய தக்காளி பழத்தை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பாயாவுக்கு தேவையான மசாலாவை அரைத்து விடலாம். அதற்கு 1 கப் துருவிய தேங்காய், 10 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் மிளகு , 6 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் பெருஞ் சீரகம், 10 முந்திரி, 1 ஸ்பூன் உடைச்ச கடலை, 1 ஸ்பூன் கசகசா, ( ஊற வைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்). இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த உடன், அரிந்து வைத்த வெங்காயத்தையும் ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்த பேஸ்ட்டை இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு, அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து 1 ஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி விடுங்கள். தக்காளியை அதிகம் வதக்க கூடாது. உங்களுக்கு பாயா இன்னும் கொஞ்சம் தளர்வாக வேண்டுமென்றால் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றியுடன் குக்கரை மூடி விட்டு ரெண்டு விசில் வந்தால் போதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.  இப்போது விசில் இறங்கியவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழைகளை மேலே தூவி ஒரு முறை கலந்து இட்லியுடன் பரிமாற வேண்டியது தான். இதில் தக்காளியை குழைய விட வேண்டாம். கொஞ்சம் பெரிய பெரியதாக அப்படியே இருந்தால் பார்க்கவும் அழகாக இருக்கும். அவ்வளவு தாங்க நிமிஷத்துல இந்த தக்காளி பாயா ரெடி. ரொம்ப ரொம்ப ஈஸியா அதே நேரத்துல அசைவ சுவையில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். நீங்களும் உங்க வீட்ல இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இடியாப்பம் இப்படி எல்லாத்தோடையும் வச்சு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...