கார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் ஒரு நபரை சந்தித்தேன். கோவை முக்கிய பகுதியில் ஹோட்டல் வைத்துள்ளாராம். அப்போது சர்வீஸ் சென்டரில் இருந்த முதலாளி டேய் அதை கழட்டாதே இதை கழட்டு என்று சொல்லியவாறே, எங்களிடம் "இவன் பேசறது எனக்கு புரியல, நான் பேசறது அவனுக்கு புரியல" என்றார் சிரித்தவாறே.
இதைக் கேட்ட ஹோட்டல் ஓனர், உங்களுக்கு தொழில் ஒழுங்கா செய்யனும்னா நீங்கதான் இந்தி கத்துக்கனும், அவன் இல்லை. அவனை நம்பித்தான் நாம இருக்கோம், நம்மள நம்பி அவங்க இல்லை. அவன் உழைக்க தயாரா இருக்கான், இங்க விட கேரளால, கர்நாடகால அதிக சம்பளம்னா அங்க போயிடுவான். ஆனா நாமதான் அவங்கள நம்பி இருக்கோம். நம்ம ஆளுங்க பூரா டாஸ்மாக்குல கெடக்கறான். உருப்படியா உழைக்கவும் மாட்டான். நானே பாரு பள்ளிக்கூடத்து பசங்கமாதிரி இந்தி படிச்சுதான் தொழில் செஞ்சிட்டு இருக்கேன். ஹோட்டல்ல பதினெட்டு பேரு வேலை பார்க்கறாங்க, அதுல பதினஞ்சு பேருக்கு தமிழ் தெரியாது. ஒடிசாக்காரன், பீகார்காரன் எல்லாம் இருக்கான். ஒடிசாக்காரனுங்க பல பேரு இந்தி தெரியாம கிராமத்தை விட்டு வெளிய வந்துதான் கத்துக்கறான். ஏன்னா நாளைக்கு அவன் ஆந்திரா போனாலும், கேரளா போனாலும், மகாராஷ்டிரா போனாலும் இந்திய வெச்சு சமாளிச்சுக்குவான். ஆனா நாமதான் இந்தி தெரியாம குண்டு சட்டில குதிரை ஓட்டறோம். இன்னும் ஒரு நாலு வருஷத்துல இந்தி தெரியாம எவனும் இங்க தொழில் பண்ண முடியாது பார்த்துக்க. அரசியல்வாதி அவன் தொழில் பண்ண இந்தி வேண்டாம்பான். ஆனா நாம தொழில் பண்ண இனி இந்தி இல்லாம எதுவும் நடக்காது.
எத்தனை நிதர்சனமான பேச்சு என்று தோன்றியது.
வடக்கன்ஸ் என்று கேலி பேசி திரியும் கூட்டத்திற்கு இது ஒரு பாடம்.
No comments:
Post a Comment