அப்ப #பேனா சிலை வைக்க முடியாது
சென்னையை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் காந்தி தர்ஷன் கேந்திரா நிறுவனத்தின் தலைவருமான திரு. ஸ்ரீனிவாசன் என்பவர் 2008 ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா இல்லத்திற்கு எதிரில் விடுதலைப் போராட்ட வீரர் திலகர் நினைவாக "திலகர் மார்க் " என்று நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார்
அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக விசாரிக்க ரிட் மனு தொடர்கிறார். அந்த வழக்கானது
WP No. 4609 / 2008 என்று பதிவாகிறது
அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த (திமுக) தமிழக அரசின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
அதில் மெரினா கடற்கரை தூய்மை நிறைந்த இடமாக பாதுக்காக்கப் படுவதால் எந்த விதமான கட்டுமானங்களும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதுவும் நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகிறது.
பின்னர் அந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இதையெல்லாம் மக்களுக்கு ஊடகங்கள் சொல்லாது.
No comments:
Post a Comment