Thursday, February 2, 2023

காலத்தால் பிரிக்க முடியாத பிணைப்பு கணவன் மனைவி.

 மனைவி கணவனுக்கு இரண்டாம் தாய்

கணவன் மனைவிக்கு தந்தைக்கு நிகரானவன்
தாயின் அன்புகூட மகன் மகளுக்கு எனபகிர்ந்தே அளிக்கப்படுகிறது
மனைவியின் அன்போ கணவனுக்கு மட்டுமே கணவனும் தன் அன்பும் மனைவிக்கு என் று மட்டுமே என வாழ வேண்டும்
கணவனின் இழப்பு மனைவிக்கு பேரிழப்பு
மனைவி இழப்பும் கணவனக்கு ஈடு செய்ய முடி யாது
காலத்தால் பிரிக்க முடியாத பிணைப்பு.கணவன் மனைவி
இறப்பு ஒன்று மட்டுமே இவ்பிணைப்பை பிரிக்கக் கூடும்
இதை புரிந்து கொண்டால் அவர்கள் இருவரும் சோடி நம்பர் ஓன்று
இருவரும் இணையானவர்கள் என்பதை அறிய வேண்டும்
மற்றவர்கள் முன்னிலையில் கணவன் மனைவியோ கணவன் மனைவியையோ நிலை தாழாமல்பார்த்துக்கொள்ள வேண்டும் .
மனைவி /கணவன் நிலை தாழும்போது விட்டு கொடுக்காமல் ஆதரவாக அவர்களின் உரிமையை நிலைநாட்டவேண்டும்
மற்றவர்களிடம் ஒருவர் மற்றவரைப் பற்றி அவர் முன்னிலையிலோ அல்லது மறைவிலோ தரம் தாழ்த்தி கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் பேசக்கூடாது.
ஒருவரின் விருப்பு வெருப்பு அறிந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இருவரும் இணக்கமாக வாழ வேண்டும்
இருவரும்ஒருவர் மற்றவரின் நிறைமட்டுமே கொள்ள வேண்டும்
துன்பம் வரும் போது ஒருவர் மற்றவரை குறை கூறாமல் ஒருவரை ஒருவர் துவலாமல் காக்கவேண்டும்
இல்லறத்து இலக்கணமாய் இரடைகிளவியாய் இருவரும் வாழ வேண்டும்
இருவரின் உறவுகளையும் இருவரும் சமமாக பாவிக்க வேண்டும்
கணவன் நான் என்றோ மனைவி நான் என்றோ செருக்கு இல்லாமல் இருவரும் .வாழ வேண்டும்
பரிவும் பாசமும் ஒருவர்மீது ஒருவருக்கு இருக்க வேண்டும்
விட்டு கொடுக்கும் மனப்பாண்மையுடன் இருவரும் வாழ வேண்டும்.
ஒருவர் மற்றவரிடம்
“தோற்றுபோவதும் கூட சுகமே “என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
இங்கே என் கவிதை வரி கள் மேற்கோளாக
“ ஆல் விழுதுகள் என
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
ஆணி வேராய் நீ இருப்பதால் தான்
ஆடாமல் விழாமல் நிற்கின்றேன்”
என்று ஒருவர் மற் றவரை எண்ணவேண்டும்
உள்ளத்தால் இணைவதே இல்லற வாழ்வு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...