Friday, April 28, 2023

பவளமல்லி உதிரும் காரணம்!

 அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம் .

அந்த தேவதைக்கு சூரியன் மீது காதல்
சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா ,
கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாள் .
சூரியனோ என்னால் உன்னை ஏற்க முடியாது என்று சொன்னான்.
இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா சூரியனுடன் கடும் கோபம் கொண்டு , இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன் .
என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய் .
இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு , காதல் தோல்வி தாங்காமல் , பாரிஜாத பூவாய் உருமாறினாள்.
அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து,
நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி,
சூரியன் உதிக்குமுன்னமே , தனது பூக்களாய் சொரிந்து ,
உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறது.
விஷ்ணுவிற்கு உகந்தது பவள மல்லி.
.இதன் வேரில் ஆஞ்சநேயர் குடியிருக்கிறார் .
எனவே பெண்கள் இம்மலரை தலைக்கு சூடுவதில்லை .
பாமா ருக்மணி இருவருக்குமே இஷ்ட மலர் பவள மல்லி.
பொதுவாய் தரையில் விழுந்த மலரை சுவாமிக்கு சாற்றக்கூடாது .
ஆனால் அந்த விதி பவளமல்லிக்கு பொருந்தாது.
ஒருமுறை மதுரா பிருந்தாவனத்தில் கீழ் விழுந்த பவள மல்லியை ராதை தொடுத்து கொண்டிருக்க
கிருஷ்ணர் பாரிஜாத நறுமணத்தில் மயங்கி
ராதை கோர்த்த பவளமல்லி மாலையை நுகர்ந்து
தன் கழுத்தில் அணிந்து கொண்டாராம்.
அன்றிலிருந்து தரை தொட்ட பவளமல்லி இறை சூடும் மலராயிற்று.
May be an image of devilwood
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...