நாம் மறந்து போன கிராமத்து வண்ணார்கள்..!
சில வருடங்களுக்கு முன்பு கூட வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ துணி எடுத்துக்கொண்டு போவார்கள்.
கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ..
ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்..
சவக்காரம் போட்டு..
வெள்ளாவி வைத்து வெளுத்து வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப்போட்டு..
எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார்கள்..
அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை
‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து
(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து..
இஸ்திரி போட்டு கட்டி வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..
அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்..
இத அவர் வீட்டு துணி..
இது இவர் வீட்டு துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு..
இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்..
சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்
கொடுப்பார்கள்..
(நாங்கள் நெல்தான் கொடுப்போம்)
அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்..
விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண..
அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது..
(எங்கள் ஊரிலும் ஒரு சம்பவம் இப்படி கண்டு பிடிக்க பட்டது)
வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு..
புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்...
இப்போது அந்த வாசனையை இழந்துவிட்டோம்..
வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்..
சில திருமணங்கள் இவர்கள் பார்த்து தான் முடிந்திருக்கும்..
பல வருட பகையும் தீர்த்து வைக்கும் நாட்டாமையும் இவர்கள் தான்..
வெளுக்க வைத்து வெளுக்க வைத்து
வெள்ளை மனம் படைதமனிதர்கள்கள். அவரிடம் துண்டு வாங்கி போட்டு சென்றால் அதிர்ஷ்டம்..
காரிய ஜெயம் என்று ஏட்டில் எழுதாத நம்பிக்கை..!
No comments:
Post a Comment