பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள சோழவந்தானில் 15 நாட்கள் நடைபெற்றது. மற்ற நடிகர் இயக்குனர் மாதவன் டெக்னீசியன்கள் எல்லோரும் மதுரையில் தங்கி அங்கிருந்து படப்பிடிப்புக்கு தினமும் வருவர் .
டி ஆர் மகாலிங்கத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியது அது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக கூறுவார் சிவாஜி..
ஒரு முறை டி ஆர் மகாலிங்கம் சென்னைக்கு வந்தபோது என் தந்தைக்கு போன் செய்து என்ன ஓய் ஜி பி நான் ஸ்வாகத் ஓட்டலில் தங்கி இருக்கேன்... இங்கே வாங்க... நான் வேணும்னா உங்களுக்கு கார் அனுப்புகிறேன் என்றார்... உடனே என் தந்தை என்னன்னா இங்கே உங்களுக்கு ஏது கார் சோழவந்தானிலிருந்து கொண்டு வந்துட்டீங்களா என்று கேட்டார்..
அதற்கு மகாலிங்கம் தன் குரலில் ஒரு பெருமிதத்தோடு சொன்னார் அதெல்லாம் இல்லை சாமி நான் எப்ப சென்னைக்கு வந்தாலும் தம்பி கணேசு ஒரு காரை எனக்கு டிரைவரோடு அனுப்பி விடுவார் நான் ஊருக்கு போகும் வரைக்கும் கார் என் கூடத்தான் இருக்கும் தெரியுமா என்றார்...
தனக்கு முன்னோடியாக இருந்தவர்களை நடிகர் திலகம் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இது ஒரு சான்று....
இது கூட பரவாயில்லை ஒரு முறை உத்தமபுத்திரன் படத்தைப் பற்றி சிவாஜியிடம் பேசிக்கொண்டிருந்த போது டேய் நான் என்னதான் இதில் நடிச்சிருந்தாலும் ஒரிஜினல் உத்தமபுத்திரனில் சின்னப்பண்ணன் ( பி.யூ.சின்னப்பா) செஞ்ச அளவுக்கு நான் செய்யலடா என்றாரே பாருங்கள்.......
ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் நான் சுவாசிக்கும் சிவாஜி என்ற நூலிருந்து.. நன்றி
*************************************************
மூத்தவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் நடிகர் திலகம் என்றும் முதன்மையானவர்........
தனது முதல் படத்தை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு படப்பிடிப்பு அரங்கில் இருக்கும் வரை
புகைபிடிக்க மாட்டார்....
அதே போல் இயக்குநர் எல் வி பிரசாத் முன்னிலையிலும் புகைபிடிக்க மாட்டார்...
தனக்கு நாடகத்துறையில் நடிப்பு பயிற்சி அளித்த குருநாதர் பொன்னுசாமி பிள்ளையை பார்த்த இடத்தில் காலில் விழுந்து வணங்குவார்....
தன்னைவிட நான்கு மாதங்கள் மூத்தவரான ஏபி நாகராஜன் அவர்களை நடிகர் திலகம் அண்ணன் என்று தான் அழைப்பார்.... அதேபோல் டி எஸ் பாலையா அவர்களையும் அண்ணன் என்று தான் அழைப்பார் தன்னைவிட மிகச் சிறப்பாக நடிக்க கூடியவர்கள் ராதா அண்ணனும் பாலையா அண்ணனும் தான் என்று அடிக்கடி கூறுவார்...
ஆனால் தன்வயதை ஒத்தவர்கள் உடன் சேர்ந்து விட்டால் போதும்.....உலகையே மறந்து விடுவார்.....அதுவும் நம்பியார், பாலாஜி விகேஆர் மேஜர் சுந்தர்ராஜன் இவர்களோடு சேர்ந்தால் அந்த இடத்தில் கலாட்டாக்களும் கேலியும் கிண்டலும் மகிழ்ச்சியும் தாண்டவம் ஆடும்.........
No comments:
Post a Comment