Sunday, April 23, 2023

படம் வெளியான போது சரியாக போகாமல், சில வருடங்களுக்கு பிறகு மறுவெளியீட்டின் போது வெற்றிகரமாக ஓடியது....

 

🌹பழனி தமிழ் திரை 1965
மூன்று தம்பிகளுடன் விவசாயம் செய்துக் கொண்டு ஒரு கிராமத்தில் வாழும்
‘பழனி’ என்ற அப்பாவி விவசாயியைப் பற்றிய கதையைக் கொண்டது இப்படம்.
🌹பழனி வேடத்தில் சிவாஜி கணேசனும், அடுத்த தம்பி வேலுவாக ஸ்ரீராமும், இரண்டாவது தம்பி ராசுவாக எஸ்.எஸ்.இராஜேந்திரனும், மூன்றாவது தம்பி முத்துவாக முத்துராமனும் நடித்துள்ளார்கள்.
🌹மனைவியை இழந்த பழனி தன் தம்பிகளின் நல் வாழ்வுக்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறான்
🌹.ஸ்ரீராமின் மனைவியாக சிவகாமியும்,
🌹எஸ்.எஸ்.ஆரின் மனைவி காவேரியாக (அக்கா மகள்) தேவிகாவும்,
🌹முத்துராமனின் மனைவி எமிலியாக புஷ்பலதாவும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடி இல்லை, அதனால் காதல் பாடல்கள் இல்லை. ஆனால் அவர்;
🌹இதயம் இருக்கின்றதே தம்பி,
🌹அண்ணன் என்னடா தம்பி என்னடா, என்ற இரு சோகப் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும்
🌹அண்ணாச்சி வேட்டிகட்டும் ஆம்பளையா நீங்க’ என்ற பாடல்
🌹 “ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ என்ற பாடல் காட்சியில் மூன்று தம்பிகளுடன் நடித்துள்ளார். துணை நாயகனாக நடித்த
எஸ்.எஸ்.ஆருக்கு இரு டூயட் கட்சிகளிலும், இரு குழு பாடல்களிலும் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
🌹அண்ணன் என்னடா!
தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!
ஆசை கொள்வதில்
அர்த்தம் என்னடா!
காசில்லாதவன் குடும்பத்திலே!
வாழும் நாளிலே!
கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா!
கை வறண்ட வீட்டிலே!
உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா!
மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீதுதான்
பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா!
பதைக்கும் நெஞ்சினை
அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா!
அண்ணன் தம்பிகள் தானடா.
May be an image of 1 person
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...