அவர்கள் எவ்வளவு சம்பாதித்துள்ளனர் என்ற விவரங்களை, அவர் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தெரியாதா?
என்ன மாதிரியான பிரச்சினை,
எவ்ளோ பெரிய விஷயம்?
சீமானோட ரியாக்ஷனை பார்த்தீங்களா?
இவ்வளவு தான் சீமான்.
"திமுகவினர் இருபதாயிரம் கோடி, முப்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து குவித்து வெச்சது பெரிசு கிடையாது."
ஆனால்
பத்து பைசா பெறாத விஷயத்திற்கு மூச்ச இழுத்து பிடிச்சிக்கிட்டு,
குரலை உயர்த்தி
விரலை உயர்த்தி
விரைப்பாக நின்னுகிட்டு
வீரவசணம் பேசுவாரு.
நல்லா யோசிங்க என் மக்களே,
'இவரு தான் தமிழ்நாட்டையும், தமிழரையும் மீட்க வந்த போராளின்னு, இவரே சொல்லிகிட்டு திரியராரு'.
இங்கே ஐநூறு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கவே தலை எல்லாம் சுத்துதே,
வெளிப்படையாக பெரிய தொழில்கள் ஏதும் செய்யாத நீங்க எப்படி இருபதாயிரம், முப்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்தீங்க?
நிதியமைச்சர் நல்லவர், வல்லவருன்னு சீமானே சர்டிபிகேட் கொடுக்கறாரு.
அப்படி என்றால் பிடிஆர் சொல்வதில் உண்மை இல்லாமலா இருக்கும்?
இந்த விஷயத்தை சிபிஐ, அமலாக்க துறை, வருமான வரித்துறை போன்றவை உடனே விசாரணை செய்ய வேண்டும். திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சீமான் வாயே திறக்க மாட்டார்.
அதையும் எப்படி பவிசாக உருட்டுகிறார் பாருங்கள்,
'ஏன் பிடிஆர் சொல்லலேன்னா உங்களுக்கு தெரியாதா?'
சீமான் போன்றவர்கள்
'திமுகவினரின் சொத்து குவிப்பினைப்பற்றி அறிந்திருந்தும், தெரிந்திருந்தும்
அது ஒன்றும் பெரிய விஷயமில்லை, இங்கே சமூக நீதியை காப்பாற்றுவது தான் முதல் கடமை, சொத்து சேர்க்காத ஆள் யார் இருக்கா?
அப்படின்னு,
"பல ஆயிரம் கோடி சொத்து குவிப்பினை பற்றி அதிகம் சிந்திக்காமல், மக்களை சாதாரணமாக கடந்து செல்ல தூண்டும் வாதங்களை பொதுவெளியில் திரித்து விடுவது தான் இவர்கள் வேலை."
ஆனால் நன்றாக கவனியுங்கள்,
'சாதாரமான விஷயத்துக்கு மூச்சை பிடிச்சிக்கிட்டு, மூனு நாளைக்கு விடாமல் பேசிட்டே இருப்பானுக'
இவ்வளவு தான் இவனுக தமிழர்களை காப்பாத்தறோமுன்னு சொல்லிகிட்டு திரியற லட்சணம்.
சீமானோட வெட்டி பேச்சினையும், கதைகளையும், வீராவேச வசனங்களையும் உண்மை என்று நம்பி, அவர் பின்னால போயி நிக்கற இளைஞர்களை பற்றி நினைக்கும் போது தான் வருத்தமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது.
இன்னிக்கு யாரை சீமான் திட்டி பேசறாரோ,
அவரையே நாளைக்கு நாங்க ஒரு தாய் வகுத்து பிள்ளைகள்,
அவரு எங்க அப்பா, சித்தப்பா, அண்ணன், எங்க ஐயா என்று உருக்கமா பேசிட்டு
எனக்கும் அவருக்கும் எந்த வாய்க்கால் தகராறும் கிடையாது என்று பாலீஷா ஒதுங்கி போயிருவாரு.
சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த அன்றைக்கு
என் தம்பின்னு உருகுன ஆள், இன்னிக்கு ஏன் தள்ளி நிக்கறாரு?
வீராவேசமாக நாம் வாயில் நெருப்பை எறிய வச்சு, அதில் சுட்டு தரும் வடைகளை கேட்டு,
உண்டு மகிழ்ந்தது போல அருமையாக ரசித்து ஆர்ப்பரிப்பார்கள் என்ற சூட்சுமம் தெரிந்திருக்கிறது.
சீமான் சினிமாவில் டைரக்டர்.
ஆனால்
அரசியலில் ஒரு பக்கா நடிகன்.
ஆனால் இந்த கானல் நீரை உண்மை என்று நம்பி, இவர் பின்னால் திரியும் மக்களை என்னவென்று சொல்வது?
சீமான் எனும் மண் குதிரை தங்களை மீட்டு செல்லும் என்ற தமிழர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அது வெறும் சினிமா குதிரை, அதை பின்னால் இருந்து தள்ளிவிடுபவர்கள் யார் என்று உணராத மக்களை எப்படி திருத்துவது?
திராவிட மாயையில் வீழ்ந்த தமிழன், இப்போது தமிழ் தேசிய மாயைக்கு பலியாகிறான்.
எதுவாக இருந்தாலும், அது தேசத்திற்கு இழப்பு தான்.
சீமானின் இரட்டை வேடம் உணர்ந்து திருந்துங்கள் என் மக்களே.
தமிழக மக்களின் உண்மையான விடியல் அண்ணாமலை எனும் மக்கள் சேவகனால் மட்டுமே தர முடியும்.
No comments:
Post a Comment