மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்
இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தமிழகஅரசு மேற்கொள்ளும் பணிகள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்வதில் எந்த பேதமும் பாராமல் கட்சி சார்ந்தவர்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இறைப்பணியில் தம்மைமுழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கோயில் சொத்துக்களை பாதுகாக்க கூடிய மனநிலை உள்ளவர்களை கருத்தில்கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலில் ரூபாய் 200 கோடிக்குசொந்த செலவில் பெருந்திட்டவளாகம் அமைத்து திரு. சிவ நாடார் இறை பணியாற்றி வருகிறார் அதோடு பல கல்விப் பணிகளையும் அறப்பணிகளையும் செய்து வருகிறார் ஆன்மீக செம்மல் கற்பகம் பல்கலைக்கழக இணை வேந்தர் கோவைதிரு. வசந்தகுமார் பல்வேறு பழமையான கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார் தற்பொழுதும் கூட டெல்டா மாவட்டங்களில் உள்ளபழமை வாய்ந்த கோயில்களை பல கோடி செலவில் திருப்பணி மேற்கொண்டு வருகிறார் அவரோடு இணைந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பணிச்செம்மல் "கோமல் சேகர்" அவர்கள் திருப்பணிகளை செய்துள்ளார். தற்போதும் கோவை வசந்தகுமாருடன் இணைந்து பல்வேறு கோவில்கள் திருப்பணிகளை ஆற்றி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டத்திலும் மற்றும் தமிழகம் எங்கும் சைவ நன்னெறி வகுப்புகளை ஏற்படுத்திசைவர்களை முறையான வழிபாட்டில் ஈடுபடச்செய்துள்ளார்.ம. தமிழகம் பூராவும் சைவ நன்னெறி வகுப்புகளை பல்வேறு ஊர்களில் துவக்கிபுத்தகங்கள் இலவசமாக வழங்கி பக்தர்களை வாழ்வியலில் நெறிப்படுத்தி இறைபக்தியை ஏற்படுத்தி வருகிறார். மேலும் திருவாவடு துறை ஆதீனத்தை சேர்ந்த சைவ சித்தாந்த,திருமுறை பயிற்சி வகுப்புவகுப்பு瓿걭 அமைப்பாளர்கள் இறைபணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுஎந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பணியாற்றி வருகின்றனர்.@@@ இறைபணியாற்றும் மும்மூர்த்திகளைப்பாராட்டியும் நன்றி தெரிவித்தும் திருச்செந்தூர் செந்திலாண்டவர்சன்னதியில் 14.12.2022முதல் தொடர் மகாஅங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார் இவர்களையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்து ஆலோசனை பெறுவதுடன் அறங்காவலர் குழுவில் பங்கு பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி .நமசிவாய 20.04.2023
இந்துத் திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு
நகல்:ஆணையர் இந்துசமய அறநிலையத்துறை சென்னை
No comments:
Post a Comment