தலிவரே
என்னா மோசமா நம்ம குடும்பத்தை பத்தி போன்ல பேசிட்டான்.
அவன் பதவிய உடனே புடுங்குங்க, கட்சிய விட்டு தூக்குங்க.
அவனுக்கு தெரிஞ்ச உண்மையை தன்னை அறியாம உளறிட்டான்
இப்ப பதவியை புடுங்கி கட்சிய விட்டு நீக்கினா அவனுக்கு இன்னும் என்னென்ன தெரியுமோ அதெல்லாம் சொல்ல ஆரம்பிப்பான்.அவன் சொன்ன செய்தி எனக்கே புதுசு.என்னை சுற்றி இவ்வளவு நடக்குகின்கிறதே அவன் போன் பேச்சை வச்சுதான் எனக்கே தெரியும்.அதனால அவன் பதவியிலும் கட்சியிலும் இருக்கட்டும்.
சரி தலிவரே, அப்ப அவனை விட்டு அந்த போன் பேச்சு பொய்யின்னு சொல்லி கேஸ் போட சொல்லுங்க.
டேய் அது அதைவிட டேஞ்சர். அப்படி சொன்னா ஆடியோ பதிவு போட்டவன் கோர்ட்டுக்கு போய் ஆடியோ உண்மையா பொய்யான்னு சோதிக்க சொல்வான் உண்மைன்னா நமக்கு இன்னும் டேஞ்சர்.மேலும் போன் பேச்சின் ஒரு சிறு பகுதிதான் வெளியே வந்திருக்கு. முழுசும் வந்தா அவன் இன்னும் என்னவெல்லாம் பேசினான் என்பதும் வெளி வரும்.அதுல இதைவிட மோசமா குற்றம்சாட்டி பேசி இருக்கலாம்.அது வந்தா பெரும் டேஞ்சர்
தலிவரே நாம அமைதியா இருந்தா நம்ம பேர் கெடாதா?
ஒண்ணும் கெடாது.அண்ணாமலை ஒரு லிஸ்ட் விட்டவுடன் எல்லோரும் அது பற்றி பேசினார்கள்.
இப்ப இவர் ஆடியோ வந்தவுடன் மக்கள் அதை மறந்தாச்சு.
அடுத்து அண்ணாமலை part 2 வெளியிடபோறேன்னு சொல்லி இருக்கார்
அது வந்தா இந்த ஆடியோவை மக்கள் மறந்திருவாங்க.
இப்படி 2026வரை அல்லது இன்பா முதல்வராகும் வரை ஓட்ட வேண்டியதுதான்.
No comments:
Post a Comment