Friday, April 28, 2023

*சிவராத்திரி அன்று மட்டும் திறந்திருக்கும் பிறவாதீஸ்வரர் கோயில்*

 அடுத்த சிவராத்திரிக்கு தவறவிடாதீர்கள்.

காஞ்சிபுரத்தில் ஆண்டுக்கொருமுறை பக்தர்களுக்காக திறக்கப்படும் பிறவாதீஸ்வரர் கோயிலில், சிவராத்திரியன்று மட்டுமே தரிசனம் செய்ய இயலும்
வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார்.
இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகாது" என்று அருளிச்செய்தார்.
வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவ லிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும்.
இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது.
இக்கோயிலின் கருவறைக்குள் அபூர்வ புவனேஸ்வரராகிய பிறாவதீஸ்வர்ர் அருள்பாலிக்கிறார்.
இப்பிரசித்தி பெற்ற மணல் கல்சிற்ப கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூஜை செய்வதற்கு மட்டும் அதிகாலை திறக்கப்படும் கோயில் சிவராத்திரியன்று மட்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது.
*அமைவிடம்*
காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலையில், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...