இந்த படத்தில் உள்ள அறுசுவை உணவை பார்த்த மாத்திரத்தில், காமராசர் நினைவுகள் என் கண் ஓரத்தில் நீர் கசிய வைக்கிறது. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது.
பெருந்தலைவர் காமராசரைப் பார்க்க "சோ" ராமசாமி அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது காமராசர் சோ-வைப்பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வந்திருப்பே. வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். ஒருநாளாவது உன்னை சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார். அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை.
இல்லை இல்லை சொல்லு, ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க ஐயா, சொல்லலை என்று கூறியுள்ளார்.
ஏன் சொல்லலை தெரியுமா? நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப் போடும் பிச்சைச் சோறப்பா. இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமலிருந்தேன். நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம்.
காமராசர், மக்கள் வரிப் பணத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட சொற்ப சம்பளத்தில்தான் வாழ்ந்து வந்தார். கமிஷன் காப்சன் என்று கை ஏந்தி பணம் சேர்த்து அந்த பணத்தில் சொகுசு பங்களா, சொகுசு கார், TV சேனல், பட நிறுவனம், பள்ளி கல்லூரி, ரியல் எஸ்டேட் என்று சொத்து சேர்க்கவில்லை. முதல் அமைச்சர், அமைச்சர், MP, MLA பதவிகள் எல்லாம், மக்கள் சம்பளம் கொடுத்து கூலிக்கு வைக்கப் பட்டு இருக்கும் பதவி என்பதை நன்கு அறிந்து இருந்தார் காமராசர் என்பதைத்தான் அவரது பேச்சு காட்டுகிறது.
ஊழல் மன்னர்கள் இந்த மண்ணை மாறி மாறி ஆட்சி செய்ய காரணம் என்ன? சுய நல காரணங்களுக்கு திருடனுக்கு வீட்டில் தங்க வைத்து அடைக்கலம் கொடுக்கும் கதையாக உள்ளது மக்களின் மன நிலை. இரண்டாவது சாதி அரசியல். திருட்டு வளக்கில் சிறை சென்று வந்தவருக்கு "என்ன இருந்தாலும் நம்ம சாதி இல்லையா" என்று பரிந்து பேசும் கூட்டம். இவர்கள் சிந்தனை தேசிய நீர் ஓட்டத்தில், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் கலக்காதவரை திருடன் இந்த மண்ணை ஆட்சி செய்யும் அவலம் நீங்காது.
காமராசர் இறந்த போது அவர் கணக்கில் இருந்தது சில நூறு ரூபாய் மட்டுமே. இன்று Dmk files முதல் பட்டியல் மட்டும் சுமார் 1.34 லட்சம் கோடி.
ஊழலை ஓரம் கட்ட ஒரு சந்தர்பம் இப்போது வந்து உள்ளது. அண்ணாமலை என்ற உருவில். நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். காமராசரை இழந்த நாம் அண்ணாமலையையும் இழந்து விடல் கூடாது.
No comments:
Post a Comment