Sunday, April 23, 2023

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் . கதை புரிய வைத்து விட்டது.

 மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._

1)- மதத்தலைவர்
2)- வழக்கறிஞர்
3)- இயற்பியலாளர்
முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._
ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்._
மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்._
அடுத்ததாக வழக்கறிஞர்,
அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது.
_"நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார்._
மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்._
அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._
எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்._
உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது._
நீதி:-
--------
சில சந்தர்ப்பங்களில்
வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்!
தெரிந்த உண்மைகளையெல்லாம் உளரிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்!
சிலவேளை முட்டாளாக இருப்பதுதான்
புத்திசாலித்தனமானது!
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...