தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும்
எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தவழ்ந்து தவழ்ந்து
முதுகு வளைந்து வளைந்து குனிந்து குனிந்து கும்பிடு போட்ட எடப்பாடி தவழ்ந்தபாடி
அறிக்கை ...
போன அறிக்கையில்
கூட்டணியை பற்றி
டெல்லி தலைமையிடம் பேசிக் கொள்வேன் என்றும்
அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தியே பேசுகிறார் என்றும்
முதிர்ந்த அரசியல் தலைவர்களை பற்றி கேளுங்கள் ...பதில் சொல்கிறேன் என்றும் சரம்சரமாக கேள்வி கேட்ட
நிருபர்களிடம்
அள்ளி விட்டீர்களே .....
அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தலில் பம்பரமாக சுற்றி சுழல்கிறார் ...
இந்த சமயம் டெல்லி சென்றால் அங்கே முதிர்ந்த அரசியல் பாஜக தலைவர்களிடம் கூட்டணியை பற்றி பேசலாம் என்று தவழ்ந்த கணக்கை போட்டு டெல்லி போனீர்கள் ...
அந்தோ பரிதாபம் ...
அங்கே இளம் தலைவரை
ஆற்றல் மிக்க அண்ணாமலையை
முதிர்ந்த தலைவர்கள்
முன்னிறுத்தி தவழ்ந்து பதவி வாங்கிய தலைவரிடம்
அண்ணாமலை இன்றி கூட்டணி பற்றி பேசுவது
நடக்காது
சரியாக இருக்காது என்று
பாடம் நடத்தி
சில ராஜதந்திர அரசியல் கணக்குகளை எடுத்துரைத்து உங்களின் தளர்ந்த அரசியலை
சுட்டிக் காட்டிய திரு.அமித்ஷா திரு.நட்டா ஜியை கண்டு அதிர்ந்து மீண்டும் முதல்வர் பதவிக்காக குனிந்து தவழ்ந்து
அண்ணாமலை முக்கியத்துவத்தை உணர்ந்து
எந்த வாய்க்கா தகராறும் அண்ணாமலையிடம் எங்களுக்கு இல்லை என்று அண்ணாமலையை வைத்து சலாம் போட்ட
கதை தான் அண்ணாமலை
என்னும் இளம் சிங்கத்தின்
அறிவார்ந்த அரசியலாகும் .
அதனால் எடப்பாடி அண்ணன் அவர்கள் தங்கள் ஆதரவு அமைச்சர்களை முதலில் வாயை அடக்கி பாஜக விடம் மரியாதையாக அரசியல் செய்ய சொல்லுங்கள் ..
மீண்டும் தவழ்ந்து குனிந்து பதவி வாங்க பாஜக அதிமுக இல்லை என்பதை உணருங்கள் .
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment