1. 'முழுமையாக நம்பத் தேவையில்லை'
ஓர் உணவுப்பொருள், 'ஆர்கானிக்' என்று குறிப்பிட்டிருப்பதாலேயே அதை நூறு சதவீதம் இயற்கை உணவு என்று நம்பத் தேவையில்லை.
குறிப்பிட்ட உணவுப்பொருள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்பட்டிருக்கலாம்தான். ஆனால் அந்த உணவுப்பொருளை விளைவிப்பதற்காக பாய்ச்சப்பட்ட தண்ணீரில் வேதித் தன்மை இருக்கலாம்.
குறிப்பிட்ட இயற்கை வேளாண் பண்ணை அல்லது வயலின் அருகே உள்ள பண்ணையில் இயற்கை வேளாண் நடைமுறை பின்பற்றப்படாமல், அதுவும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
'100 சதவீதம் ஆர்கானிக்' என்று அருதியிட்டுக் கூறும் உணவுப் பொருள்தான் உண்மையான இயற்கை வேளாண் உணவுப்பொருளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
2. தோற்றத்தைக் கவனியுங்கள்
'ஆர்கானிக்' முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறியோ, பழமோ, தானியமோ எதுவாக இருந்தாலும் ஒரே சீராக, அதிக பளபளப்பாக இருக்காது. காரணம், இயற்கையில் ஒவ்வொரு சிறு விஷயமும் தனித்தன்மையானதுதான்.
வர்த்தக ரீதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும், செயற்கைப் பொலிவு ஏற்படும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள்தான் ஒரே மாதிரியான தோற்றம், அளவிலும் சிறுபுள்ளி கூட இல்லாமல் 'பளிச்'சென்றும் இருக்கும்.
3. 'நல்ல நறுமணம்'
இயற்க்கை முறையில் விளைவிக்கப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்படாத பழங்கள், நல்ல நறுமணம் கொண்டிருக்கும். மணம் இல்லாதிருந்தால் அல்லது குறைவாக இருந்தால், 'ஆர்கானிக்' இல்லை என்று அறியுங்கள்.
4. இதையும் கவனியுங்கள்
நமது உடல் நலத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும்
பாதிப்பதில்லை என்ற எண்ணத்தில் நீங்கள் இயற்கை விளைபொருட்களை தேர்வு செய்பவராக இருந்தால், ஒரு நிமிடம் பொறுங்கள்.
எங்கோ தொலைதூரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு உங்கள் இடத்துக்கு கொண்டு வரப்படும் 'ஆர்கானிக்' உணவுப்பொருள்கள், போக்குவரத்தின் காரணமாக சுற்றுசூழல் மாசுபாட்டுக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கும். எனவே அதற்குப் பதில் உள்ளூரில் சாதாரண முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருளே மேல்.
5. வைட்டமின்கள், தாதுபொருள்கள் அதிகமில்லை
இயற்கை உணவுகளில் வேதிப்பொருள்கள் இல்லாததாலேயே அது ஆரோக்கியமானதாகத் திகழ்கிறது. மற்றபடி அதில் வழக்கமான அளவில்தான், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் இருக்குமே தவிர இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் சத்துக்கள் கூடுவதில்லை.
6. உடனடி உணவுப்பொருள்கள்
sசமைக்காமல் உடனடியாக பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் உதாரணமாக, 'ஜாமில்' பயன்படுத்தப்பட்ட பழம், 'கெச்சப்'பில் பயன்படுத்தப்பட்ட தக்காளி போன்றவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தாலும் ஒரு நிமிடம் யோசியுங்கள். அவை கெட்டுப் போகாமல் இருக்கவும், சுவை, நிறம் கூட்டவும் வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அந்நிலையில் அவற்றை முழுமையாக 'ஆர்கானிக்' பொருட்கள் என்று கூற முடியாது.
என்ன, 'ஆர்கானிக்' பிரியர்களே, இனிமேல் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வீர்கள்தானே?
No comments:
Post a Comment