பால் கால்சியம் வளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு,நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். அதுவும் பாலில் வெல்லத்தை சேர்த்து குடித்தால்,குளிர்காலத்தில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பெரும்பாலானோர் அஜீரண கோளாறால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இதற்கு முறையற்ற வாழ்க்கை முறை அல்லது ஜங்க் உணவுகளை அதிகம் உண்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அஜீரண கோளாறு,மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம் போன்றவற்றில் இருந்து வெல்லம் விடுவிக்கும். அதுவும் பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வந்தால்,செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, அஜீரண கோளாறு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
மூட்டு வலி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு பால் மிகவும் நல்லது. பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
எடை குறைவு
பால் உடல் எடையைக் குறைக்கும் என்பது தெரியுமா? அதுவும் தினமும் பாலில் வெல்லத்தை கலந்து குடிக்க,விரைவில் எடை குறையும். வெல்லம் ஒரு இயற்கை சுவையூட்டி என்பதால்,சர்க்கரையால் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம்.
மாதவிடாய் வயிற்று வலி
மாதவிடாய் வயிற்று வலி சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியும், வயிற்று பிடிப்புக்களும் ஏற்படும். இம்மாதிரியான நேரத்தில் பாலில் வெல்லத்தைக் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் தினமும் பாலில் வெல்லத்தைப் போட்டு குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.
மாதவிடாய் வயிற்று வலி சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியும், வயிற்று பிடிப்புக்களும் ஏற்படும். இம்மாதிரியான நேரத்தில் பாலில் வெல்லத்தைக் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் தினமும் பாலில் வெல்லத்தைப் போட்டு குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.
பாலில் வெல்லத்தைக் கலந்து குடிப்பதால் முறையான செரிமானம் நடைபெறுவதோடு, உடலின் மெட்டபாலிச அளவும் மேம்படுத்தப்படும். உடலின் மெட்டபாலிச அளவு சீராக இருந்தால்,நாள் முழுவதும் உடலியக்கமும் சீராக இருக்கும்.
எலும்பு ஆரோக்கியம் வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாலில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி,முன்பிருந்ததை விட எலும்புகளை மேலும் வலிமையாக்கும். எனவே தவறாமல் வெல்லம் கலந்த பாலை அன்றாடம் குடியுங்கள்
இரத்த சுத்தம் வெல்லத்தின் முக்கியமான மருத்துவ குணம் என்றால், அது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே உங்கள் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக வேண்டுமானால்,பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள்.
No comments:
Post a Comment