Monday, March 4, 2019

'கலாச்சாரம்'

ரவுடித்தனம் செய்யும் ஒரு ஹீரோவின் ஆண்மையால் கவரப்படுகிறாள் ஒரு பிராமணப் பெண். தன் தாய் தந்தையாரால் பார்க்கப்படும் ஒரு படித்த‌ பிராமண இளைஞனை விட ரவுடி அல்லது பொறுக்கி ஹீரோவின் ஆண்மைதான் அவளை கவர்கிறது. ஏனென்றால் பிராமண‌ இளைஞனுக்கு ஆண்மையோ, துணிச்சலோ இல்லை. இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் அல்லது பிராமணன் என்றால் தைரியம் இல்லாத 'பழம்' என்று சொல்லும் காட்சி அமைப்புகள் கொண்ட ஓராயிரம் தமிழ் சினிமாக்களை நாம் பார்த்திருப்போம். பிராமணர்கள் மீதான திராவிட கூட்டங்களின் கருத்து திணிப்பு இது. சினிமாக்களை ஆங்கிலேயர்கள் இந்தியாவில், குறிப்பாக சென்னையில் அறிமுகப்படுத்திய பின், சில காலம் அது பக்தி படங்கள், தேசபக்தி படங்கள், சரித்திரப் படங்கள் என்றுதான் சென்று கொண்டிருந்தது. அதன் பின் தான் தமிழ் சினிமாக்களை திராவிட விஷம் விழுங்கத் தொடங்கியது. ஏதும் அறியாத பாமர மக்களிடம் ஓட்டு இருக்கிறது. அந்த ஓட்டை பெறுவதற்கு சினிமா ஒரு அற்புத மந்திரக்கோல் என்பதை திராவிடம் புரிந்துக் கொண்டது. சமூக சீர்த்திருத்தம், பகுத்தறிவு எனும் பெயரில் திராவிட விஷம் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க தொடங்கியது.
'கலாச்சாரம்' என்பதே சமஸ்க்ருத சொல் என்பதை நாம் அறிவோம். இந்தியர்கள் கலாச்சாரம் இல்லாதவர்கள் என்று பரப்புரை செய்த ஆங்கிலேயன் 'கல்சர்' என்கிற வார்த்தையையே நம் கலாச்சாரத்தில் இருந்துதான் பெற்றான். சுதந்திரத்திற்கு பின், ஆங்கிலேயனின் அடிமை கூட்டங்களாக இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டியும், அதன் கிளையான திராவிட கழகமும், தமிழ் நாட்டில் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது. ஆங்கிலேயனின் மதத்தை பரப்ப இங்கு அவன் வீசிய‌ ரொட்டிக்கு மதம் மாறிய கூட்டங்களுக்கு, மிக முக்கிய ஏஜண்டுகளாக திகழ்ந்தன திராவிட கூட்டங்கள். மதத்தை பரப்பும் மிஷநரிக் கூட்டங்களும், அரசியல் செய்ய திராவிட கூட்டங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தன. மிஷநரிகளின் கோடிக்கணக்கான டாலர் நிதி திராவிட கட்சிகளுக்கு அவசியப்பட்டது. நம் கலாச்சாரத்தை அழிக்க திராவிட கட்சியின் உதவி மிஷநரிகளுக்கு தேவைப் பட்டது. ஆக ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொண்டு, இரண்டும் தமிழகத்தில் பெரும் பரப்புரைகளை செய்யத் தொடங்கின.
அதற்கு எதற்கு பிராமணர்களை எதிர்க்க வேண்டும் ?
தமிழ் பிராமணர்கள் கலாச்சாரத்தின் காவலர்களாக திக‌ழ்ந்தார்கள். தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்கள் என்று பாரத கலாச்சாரத்தை அவர்கள் போற்றி பாதுகாத்து வந்தனர். பாரதீய கலாச்சார வேர்களை அவர்கள் ஒரு போதும் விடுவதில்லை. எத்தனை படித்தாலும், எத்தனை உயரங்களை அடைந்தாலும், தாய் மொழியாம் தமிழை அவர்கள் ஒரு போதும் கைவிடுவதில்லை. 'ஆக்ஸ் ஃபர்டு' பல்கலைகழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக இருக்கும் தமிழ் பிராமணர் வீட்டில் கூட செந்தமிழும் நாப்பழக்கம்தான். மம்மி, டாடி என்றோ, அங்கிள், ப்ரோ என்றோ ஆங்கில கலாச்சாரம் அடிப்படைகளில் நுழையாது. என்னதான் ஆங்கிலம் பேசினாலும் வீட்டில் அம்மா அப்பா, அண்ணா அக்காதான். ஆண்ட்டி, அங்கிள் என்று உலகமே மாறினாலும், என்ன மாமி சௌகியமா ? மாமா எப்படி இருக்கார் என்றுதான் தமிழ் பூத்துக் குலுங்கும். பிராமண தமிழில் செந்தமிழின் தாக்கம் சுடர் விட்டுக் கொண்டே இருக்கும். தூய தமிழான தகப்பனார் மருவி 'தோப்ப‌னார்' என்றும், அகத்தில் என்பது மருவி 'ஆத்தில்' என்றும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 50 ஆண்டு திராவிட கொடுங்கோல் ஆட்சிக்கு பிறகும் கூட கதா காலட்சேபங்களும், திருவாய்மொழியும், திருவாசகமும், நவராத்திரிகளும், கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் என கலாச்சாரத்தின் வேர்களை பிராமணர்கள் விடுவதே இல்லை. விடுவார்களா அந்நிய மிஷநரிகளும், உள்ளூர் திராவிட ஏஜண்டுகளும் ? தமிழ் பிராமணர்கள் அந்நியர்கள் என பரப்புரை செய்யத் தொடங்கினார்கள். உண்மையில் தன்னுடைய வேர்களை குறித்து நன்கு அறிந்த ஒரு சமுதாயம் என்றால் அது பிராமண சமுதாயமாகதான் இருக்கும்.
அது எப்படி என்கிறீர்களா ?
ஒரு பிராமணன் குல நியம‌ப்படி ஒரு பெரியவரையோ, மரியாதைக்குரியவரையோ, சந்திக்கையில் அவரை வணங்கி "அபிவாதயே" சொல்ல வேண்டும். அது அவனின் வேர்களை குறித்த‌ அறிமுகம். அதில் அவன் எந்த ஆதிகால முனிவரின் வழியில் வந்தவன் என்பதையும், எந்த கோத்திரம் எனும் வம்சாவளியை சேர்ந்தவன் என்பதையும், எந்த சூத்திரத்தை சேர்ந்தவன் (தான் பின்பற்றும் ஆச்சாரியர்), எந்த வேத பிரிவை சேர்ந்தவன் என்பதையும் சொல்லி தன் பெயரை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பிராமணனும் பித்ரு தர்ப்பணம் எனும் சடங்கை செய்கையில் தன்னுடைய தந்தை மற்றும் தாய் வழியை சேர்ந்த‌ மூன்று தலைமுறையினரின் பெயரை சொல்லி தர்ப்பணம் கொடுக்கிறார்கள். ஆனால் தன்னுடைய தந்தை பாட்டன் பெயர் கூட தெரியாமல் மதம் மாறிய கூட்டங்கள்தான் பிராமனனை அந்நியன் என்கின்றன‌.
ஆக தமிழ் பிராமணர்கள் மீது அவதூறு பரப்பி, அவர்களை அந்நியர்களாக சித்தரித்து, அவர்களுக்கும் மற்ற சமூகங்களுக்கும் வேற்றுமையை உருவாக்கினால்தான் நம் கலாச்சாரத்தை அழிக்க இயலும் என்பதை புரிந்து கொண்ட திராவிட மிஷநரிக் கூட்டங்கள் அடுக்கடுக்கான தொடர் பரப்புரைகளில் இறங்கின. மிக சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், அவர்கள் செய்த‌ மற்றொரு பரப்புரை "பிராமணர்கள் ராணுவத்தில் பங்கேற்பதே இல்லை, ராணுவத்திற்காக எந்த பங்களிப்பையோ, தியாகத்தையோ செய்த‌து இல்லை" என்பதைதான்.
இதை நாம் ஆதாரத்துடன் இனி வரும் பகுதிகள் ஆராய்வோமா ?.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...