Wednesday, March 20, 2019

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பாஜக எதிர்ப்பு திடீர் ஞானோதயம் பெற்ற பின்னணி என்ன?

ராஜகண்ணப்பன் கடந்த 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், முக்கிய துறை பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அதன்பின்னர் அவரின் மக்கள் விரோத செயல்களின் காரணமாக ஜெயலலிதா அம்மையார் அவர்களால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது இவரையும் திரைப்பட நடிகை சுகன்யா வையும் தொடர்பு படுத்தி செய்திகளெல்லாம் வந்தன.
இவர் அதிமுகவிலிருந்து விலகி கோனார் சாதி கட்சியாக ‘மக்கள் தமிழ்தேசம்’ என்ற தனிக்கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி தனித்து களமிறங்கி தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வாங்கி திமுக அதிமுகவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்ந்தது. ஆனால் யாதவர்கள் கட்சி என்கிற ஜாதி முத்திரை குத்தப்பட்ட தால் ராஜகண்ணப்பன் தொடர்ந்து மக்கள் தமிழ் தேசம் கட்சியை நடத்த முடியவில்லை.
இந்த சமயத்தில் திமுக தலைவர் கலைஞர் ராஜ கண்ணப்பனை அழைத்து திமுகவில் இணைத்துக் கொண்டார். 2006ஆம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான ராஜகண்ணப்பன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ கண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கலைஞர் மறுத்துவிட்டார். இதனால் 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜ கண்ணப்பன். ராஜ கண்ணப்பனுக்கு 2009 ஆம் ஆண்டு பா. சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தார் ஜெயலலிதா. சிவகங்கை தொகுதியில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்று விட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் திடீரென வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு பா சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜகண்ணப்பன் தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் பிறகும் அதிமுகவில் தொடர்ந்து தீவிரமாக ராஜகண்ணப்பன் இயங்கி வந்தார்.
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட ராஜகண்ணப்பன் திட்டமிட்டிருந்தார். ஆனால் சிவகங்கை தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் மதுரை விருதுநகர் நெல்லை போன்ற மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி தனக்கு வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தார் ராஜ கண்ணப்பன். ஆனால் நேற்று அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜகண்ணப்பன் பெயர் எதிலும் இல்லை.
அதிமுகவில் தினகரனின் சிலீப்பர் செல்லாக இருந்தார்.
இவர் தினகரனின் சிலீப்பர் செல் என்பதால் சீட் தரவில்லை.
இவர் தினகரனின் சிலீப்பர் செல் என்றால் ஏன் தினகரன் கட்சி யான ஆமமூக்காவில் சேராமல் திமுகவை ஆதரிக்கிறார் என சில மேல் தாவிகள் அதிமேதாவித்தனமாக கேட்கலாம்...
அங்கு தான் இருக்கிறது 420யின் சூட்சுமம் சீட் கிடைக்க வில்லை என்று உடனே ஆமமூக்காவில் சேர்ந்தால் அம்பலப்பட்டு போவோம் என்பதால்.... திமுகவை ஆதரிப்பது போல நாடகமாடுகிறார் கண்ணப்ப கோனார்...
இந்த நிலையில் மு க ஸ்டாலினை திடீரென சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார் ராஜ கண்ணப்பன். தற்போதும் கூட தென் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் யாதவர்களுக்கு என்று கணிசமான வாக்கு வங்கி உண்டு. ராஜ கண்ணப்பன் யாதவர்கள் தற்போதும் தங்களின் அடையாளமாக பலர் கருதுகின்றனர். இதே நேரத்தில் ராஜ கண்ணப்பனும் அதிமுகவில் இருந்து தன்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர் என்று கூறுகிறார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த போதெல்லாம் இவருக்கு பாஜக கண்ணில் படவில்லை...
பாஜகவுக்கு சீட்டு ஒதுக்கீடுகள் செய்த போதுகூட இவருக்கு ஞானம் ஏற்படவில்லை.
இவர் தினகரனின் சிலீப்பர் செல் என்பதால் சீட் தரவில்லை என்றவுடனேயே... திடீர் ஞானோதயம் ஏற்பட்டு
பாஜக எதிர்ப்பு குரல் கொடுத்து விட்டு திமுகவிற்கு அவர் ஆதரவை தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் இரண்டிலுமே அவர் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அவர் அதிமுகவிற்கு எதிராக பிரச்சார களத்தில் இறங்குவேன் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...