திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் AKR பள்ளி மற்றும் AKR பெட்ரோல் நிலையம் ஒரே இடத்தில் இருக்கிறது...வண்டிக்கு பெட்ரோல் போட பங்குக்குள் நுழைந்தோம்...12 to 2 வருகின்ற அனைவருக்கும் மதிய உணவு 20 ரூபாய்க்கு தினமும் வழங்கப்படுகிறது...
அந்த நிறுவனங்களின் உரிமையாளருக்கு எனது மனந்திறந்த மடலொன்று...
சார் மிக்க நன்றி...
நன்றி என்ற வார்த்தைகளுக்கள் அடக்கிவிட முடியாது தங்களின் அளப்பறிய களப்பணி...
அவிநாசி செல்லும் வழியில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்து வயிறார பசியாறிப் போன வழிப் போக்கன் நான்...
நன்றி என்ற வார்த்தைகளுக்கள் அடக்கிவிட முடியாது தங்களின் அளப்பறிய களப்பணி...
அவிநாசி செல்லும் வழியில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்து வயிறார பசியாறிப் போன வழிப் போக்கன் நான்...
பணமிருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நினைக்கும் திருப்பூர் மண்ணில் இப்படியும் வாழலாம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களின் கரங்களை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள தோன்றுகிறது ஐயா...
ஒவ்வொரு பைசாவிலும் லாப நஷ்டம் பார்க்கும் தொழிலதிபர்களுக்கிடையே இருபது ரூபாய்க்கு தரமான மதிய உணவு அளித்து தங்களின் வாரிசுகளுக்கு புண்ணியங்களை சேர்க்கும் தங்களின் உயர்பண்புக்கு தலைவணங்கியே ஆகவேண்டும்...
பசியாறி புறப்பட்ட பலூன் வியாபாரியிடம் பேச்சுக்கொடுத்தேன்...
ஏய்யா சாப்பாடு நல்லா இருந்ததுங்களா?...
உதட்டோரத்தில் பசி தீர்ந்த புன்முறுவலுடன் வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி
"அந்த மகராசா ஏழேழு ஜென்மத்துக்கும் நல்லாருக்கனும்"னு வாழ்த்தி விட்டு நகர்ந்தார்...
"அந்த மகராசா ஏழேழு ஜென்மத்துக்கும் நல்லாருக்கனும்"னு வாழ்த்தி விட்டு நகர்ந்தார்...
இன்னும் உங்களின் முகம் பார்க்காத எத்தனையோ மனதுக்குள் நீங்கள் ஒரு மகாராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்...
தொடரட்டும் தங்களின் இந்த பாமர மக்களின் பசியாற்றும் பணி...
வாழ்த்துக்களும் நன்றிகளும்...🌹
No comments:
Post a Comment