Wednesday, March 20, 2019

*இன்று பங்குனி உத்திரம்*

பங்குனி உத்திரத்தில் குலதெய்வ வழிபாடு இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கும்... குலம் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் குலதெய்வம் தெரியாமல் இருக்கக் கூடாது என்பார்கள் முன்னோர்கள். குலதெய்வ வழிபாடுகள் நிச்சய பலன் களைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பங்குனி உத்திரத்தில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
Image may contain: outdoor
மகிழ்ச்சி, செல்வம், அமைதி, குடும்பத்தில் தடையில்லா சுப நிகழ்ச்சி என்னும் பேறை வழங்குவது குலதெய்வம் மட்டும்தான். வருடத்துக்கு 12 பெளர் ணமிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
வருடத்தின் முடிவில் 12 ஆம் மாதமான பங்குனியில் வரும் பெளர்ணமியின் சிறப்பு குலதெய்வ வழி பாடு. இந்த பெளர்ணமியில் குலதெய்வத்தைத் தேடிச் சென்று வணங்கினால் பலன் மிகுதியாக இரட்டிப்பாக கிட்டும் என்பது ஐதிகம். குலதெய்வத்தை விட்டு வேறு ஊரில் வேற்று இடத்தில் தங்கியிருந்தாலும் வருடத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வ தரிசனம் செய்ய வேண்டும் என்பது முன்னோர்கள் காலத்திலிருந்து வழமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பங்குனி மாத பெளர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தைத் தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி திரும்புவதும் குலதெய்வத்தைத் திருப்திபடுத்தும்.
வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத் தினால் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் சதி செய்யும் நிலை யில் இருந்தாலும் உரிய முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கிரகங்களால் வரும் வினைகள் அனைத்தும் நல்வினையாக மாறும்.
குலம் சிறக்கவும் குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாது காக்கும் வலிமையும் சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
பங்குனி உத்திரம் இன்று குடும்பத்துடன் சென்று குல தெய்வத்துக்கு பூஜை செய்து வழிபடுங்கள். இரட்டிப்பு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வதைக் கண்கூடாக காண்பீர்கள்.
நன்றி....
*இனிய காலை வணக்கம்*
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...