நேஷனல் ஹெரால்ட் வழக்கில் மேற்படிகள் செய்த அப்பீலைத் தள்ளுபடி செய்தது. பத்திரிக்கை நடத்துவது என்ற போர்வையில் நில ஆக்ரமிப்பு நடந்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ராகுலும், சோனியாவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள் பெயிலில் இருப்பதன் காரணமென்ன? நம்நாட்டுச்சட்டமெல்லாம் இத்தாலி சொந்தங்களுக்கு செல்லுபடியாகாதா? இதேபோல் கார்த்தி, சிதம்பரம் எத்தனை ஆண்டுகள் பெயிலில் இருப்பார்கள்? ஒன்று மட்டும் தெரிகிறது. பெரிய பதவியில் இருப்பவர்களைப் பார்த்து சட்டம் பயப்படுகிறது. சாதாரண மக்களிடம் அது முழுப் பாய்ச்சலாக பாய்கிறது. மாயாவதி, மமதா மீதெல்லாம் வழக்குகள் உள்ளன. இவர்களெல்லாம் ஒன்று சேர்வதன் நோக்கம் புரிகிறது. இதோ தேர்தல் வருகிறது. இவர்கள் ஜெயித்து விட்டால் இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு சமாதி கட்டப்படும். அதற்குத்தான் இந்தக்கும்பல் மோடியை ஒழிக்க இந்தப் பாடு படுகிறது. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை தோற்கடிக்க பிரம்மப்பிரயத்தினம் செய்கிறார்கள். இவர்கள் வென்றால் நாடும், நியாயமும் தோற்றுவிட்டன என்று பொருள்.
No comments:
Post a Comment