Saturday, March 2, 2019

நெருக்கடி!

அ.தி.மு.க.,வில் லோக்சபா தொகுதி ஒதுக்குவதில்...சிபாரிசுகளுடன் அமைச்சர்கள் படையெடுப்பு..செய்வதறியாமல் பழனிசாமி - பன்னீர்செல்வம் தவிப்பு.  அ.தி.மு.க.,வில், லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், கட்சியினருக்கு தொகுதி ஒதுக்குவதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தாங்கள் கை காட்டுபவருக்கே 'சீட்' வழங்க வேண்டும் எனஅமைச்சர்கள் போர்க்கொடி துாக்குவதால் முதல்வர் பழனிசாமி- துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
அதிமுக, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், சிபாரிசு, ஜெயலலிதா

வலுவான கூட்டணி, இரட்டை இலை சின்னம் என அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதால் லோக்சபா தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் களமிறங்க துடிப்பதால் வேட்பாளர் தேர்வு ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு ஐந்து, பா.ம.க.,வுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, கோவை, வட சென்னை தொகுதிகள் பா.ஜ.,வுக்கு தரப்படலாம். தர்மபுரி, அரக்கோணம், ஆரணி, கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகள் பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படலாம்.சில தொகுதிகளை மாற்றித் தரும்படி அக்கட்சிகள் கோரியுள்ளன.
தே.மு.தி.க., கூட்டணிக்கு வந்தால் இந்த தொகுதிகளில் மாற்றம் ஏற்படலாம்.கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வாய்ப்புள்ள தொகுதிகள் எவை; அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகள் எவை என்ற விபரம் அக்கட்சி வட்டாரத்தில் கசிந்துள்ளது. அதனடிப்படையில் 'சீட்' பெற தற்போதைய எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்களின் வாரிசுகள், மாவட்ட செயலர்கள், தலைமை நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர்.அமைச்சர் ஜெயகுமாரின் மகன்ஜெயவர்தன் தென் சென்னை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். அந்த தொகுதியை, மீண்டும் வழங்க வேண்டும் என ஜெயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் தென் சென்னை அல்லது மத்திய சென்னையை வழங்கும்படி கோரியுள்ளார். முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சராக ஆசைப்படுகிறார். கிடைக்காதபட்சத்தில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் களமிறங்குவார் என தெரிகிறது.சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆரணி தொகுதியை கேட்டுள்ளார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்கு போட்டியாக எம்.எல்.ஏ., ஜக்கையன், தன் மகனுக்கு தேனி தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.மதுரை எம்.பி., கோபாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு 'சீட்' வழங்க அமைச்சர் ராஜு மற்றும்
எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதே போட்டிதான் 21 சட்டசபை தொகுதிவேட்பாளர் தேர்விலும் காணப்படுகிறது. கூட்டணி பலம் காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியில் ஆர்வம் காணப்படுகிறது. எனவே பலரும் 'சீட்' கேட்டு கட்சி தலைமையை நெருக்கி வரும் நிலையில் மாவட்ட செயலர்களும், அமைச்சர்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் 'சீட்' வழங்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.இல்லையெனில் தேர்தல் செலவை ஏற்கப்போவதில்லை என பெரும்பாலான அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் ஆளும் கட்சி தலைமை கடும் நெருக்கடி யில் இருக்கிறது.

ஜெ., ஸ்டைலில் வேட்பாளர் தேர்வு!

ஜெயலலிதா இருந்த வரை எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற விபரத்தை மாநில உளவு துறை வாயிலாக விசாரித்து அறிவார். மேலும்எதிரணி வேட்பாளர்களின் விபரமும் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் ஏழை, வசதியானவர் என்ற பாரபட்சமின்றி விசுவாசிகளுக்கு ஜெயலலிதா 'சீட்' வழங்குவார். தேர்தல் செலவை கட்சியே ஏற்கும். அ.தி.மு.க., சார்பில்பிப்ரவரியில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில், அதிகம் பேர் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களின் வாரிசுகள், உறவினர்கள். ஏற்கனவே கட்சி மற்றும் அரசு பதவிகளை வகித்தவர்களே 'சீட்' கேட்டுள்ளனர். வாரிசுகளுக்கு, சீட் வழங்கினால் அ.தி.மு.க.,விற்கு பின்னடைவு ஏற்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் ஜெயலலிதா பாணியில் உளவுத்துறை அறிக்கையை பெற்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...