Friday, April 19, 2019

வாசிப்பவர்கள் மெய் சிலிர்த்து போவது உறுதி...

இளையராஜா: 21 ம் நூற்றாண்டின் தமிழ்க் குறியீடு (ICON) .
1000 திரைப்படங்களுக்கு இசையமைத்த இசைச் சக்ரவர்த்தி இசைஞானி இளையராஜா.
தமிழர்களின், தமிழிசையின், தமிழ்த்திரை உலகின்,
தமிழகத்தின் 21 ம் நூற்றாண்டின் குறியீடு (Icon)
"இசைஞானி இளையராஜா."
கி.மு. வில் தமிழர் திருவள்ளுவரை அவருடைய சம காலத்தவர் எவரும் பாராட்டினார்களா என்பது தெரியாது.
தமிழர் இராஜ ராஜ சோழனை கி. பி. 1000 ல் அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்காக அவருடைய சம காலத்தவர் யாரும் பாராட்டினார்களா என்று தெரியவில்லை.
கி. பி. 1100 வரை தென்கிழக்காசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உலக வரலாற்றின் முதல் பெரும் கடற்படையாளன் தமிழர் இராசேந்திர சோழனை அவருடைய சம காலத்தவர் யாரும் பாராட்டினார்களா என்று தெரியவில்லை.
ஆனால் இன்று நமக்கு
தமிழர் வரலாற்றின் பண்டைய குறியீடாக இருப்பவர்கள் அவர்கள்.
சித்தர்கள் போன்று எத்தனையோ பேரை நாம் இன்னும் மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.
இன்னும் ஒரு 300 அல்லது 500 வருடங்கள் கழித்து பார்க்கும் தமிழக தலைமுறை யாரை இந்த 21 ம் நூற்றாண்டின் குறியீடாகப் பார்க்கும்?
கர்மவீரர் காமராசர், கக்கன் போன்ற வெகு சில மக்கள் தலைவர்கள் தவிர
தமிழிசைக்கு கடந்த 40 ஆண்டுகளாக அடையாளம் கொடுத்துக்கொண்டிருக்கும்
இளையராஜா தவிர்க்கமுடியாத தமிழ்க்குறியீடு
அவர் இசையின் பிம்பமாய் கொடுத்துக்கொண்டிருக்கும் இசை அமுதம் குறைவற்ற தமிழிசை செல்வம்.
- அவர் திரைப் பாடலுக்குத்தானே இசையமைத்தார்.
- கலைத்துறையின் ஊதியம் பெற்று படைப்புகளை வழங்கும் பல்வேறு நபர்களில் அவரும் ஒருவர் தானே.
- தனிப்பட்ட குறைகளைக் கண்டுபிடிக்கும் நபர்கள் சொல்வது போல (கோபம், கர்வம்,...) என சிலர் சொல்லலாமே.
தமிழிசையை, தமிழர் இசையை மீட்டு
தமிழருக்கும் இந்த உலகத்துக்கும் அரை நூற்றாண்டாக
தாரை தப்பட்டையாய்
அறிவித்திருக்கிறவர் அவர்.
திருவிளையாடலில் தருமி நாகேஷ் சொல்வதுபோல் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
இன்றைய நூற்றாண்டின் தமிழர்தம் வாழும் கால அதிசய நிகழ்வு அவர் (Extraordinary Phenomenon).
போர்ப்படைத் தளபதி மாவீர பிரபாகரன், தமிழர்களின் அரசியல் வாழ்வியல் பேராற்றல் குறியீடு என்பதைப்போல தமிழிசையின், தமிழர் வாழ்வின் பிரிக்க முடியா வாழ்வியல் பிம்பம், இளையராஜா.
1. தமிழரின் வானியல், தமிழரின் இசையோடு ஒருமித்தது என்பதைக்கண்ட இசை விஞ்ஞானி அவர். 7 சுரங்கள் - 7 வாரநாட்கள், 12 சுருதிகள்-12 மாதங்கள், 27 சுருதிப்பிரிவுகள் - 27 நட்சத்திரக்கூட்டங்கள், 72 மேள கர்த்தா ராகம் - அண்டவெளியில் சூரிய சுழற்சியின் 72 பிரிவுகள், என தமிழிசையை தமிழர் வானியலோடு இணைக்க வல்லவர். காண்க:
2. 21 ம் நூற்றாண்டின் ஆபிரகாம் பண்டிதர் அவர்.
1916ல் தஞ்சையின் ஆபிரகாம் பண்டிதர் குஜராத் சென்று கர்நாடக இசை தமிழிசையே என்று ஆதாரபூர்வமாக நிரூபித்துக்காட்டியவர். 1376 பக்கங்கள் கொண்ட "கருணாமிர்த சாகரம்" என்ற ஆய்வு மேற்கொண்டவர் அவர். ஆபிரகாம் பண்டிதர் ஆய்வில் நிரூபித்ததை தனது இசையால் நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய தமிழிசைப்பண்டிதர் இசைஞானி.
ஏழு சுரங்கள், ஐந்து விகிர்த சுரங்களும் (ஷட்ஜம்,பஞ்சமம் + ரிஷபம்,காந்தாரம்,மத்தியமம்,தைவதம்,நிஷாதம்) போன்ற ஒலிநிலைகளும் சேர்ந்து 12 இசை ஒலி நிலை (பன்னிரு நிலம்).இந்த பன்னிரெண்டு சுரங்களும் (ச-ப,ச-ம) பண்டைய தமிழர்கள் உபயோகித்து வந்தனர்.இதை ஆயப்பாலை முறையையே கர்ணாடக சங்கீதத்தின் ஆதாரமாக உள்ளது.
'குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'
என்கிறது திவாகர நிகண்டு.
தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர்.
தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.
வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை.- பிங்கலந்தை நிகண்டு
ஏழிசையின் தமிழ்ப் பெயர்
ஏழிசையின் வடமொழிப் பெயர்
1. குரல் - சட்சமம
2. துத்தம் - ரிஷபம்
3. கைக்கிளை -காந்தாரம்
4. உழை -மத்திமம்
5. இளி -பஞ்சமம்
6. விளரி -தைவதம்
7. தாரம் -நிஷாதம்

3. 1965 சனவரி 25ல் இந்தி எதிர்ப்புக்காய் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடைபெற்று 7 பேர் தீக்குளிக்க, 70 பேர் அரசின் வன்முறையில் கொல்லப்பட இந்தி விரட்டப்பட்டது. 1975 வரை இந்தி மீண்டும் திரைப்பாடல்கள் வழியாய் படை எடுத்தது.
1976 ல் வந்த தமிழ் அன்னக்கிளி இந்திக்கழுகை விரட்டியடித்தது. அன்று போன கழுகு இன்று வரை திரும்பவே முடியவில்லை. நன்றி பண்ணைபுரத்தாருக்கே.
4. தாரை தப்பட்டை வரை அவரது வாத்தியங்களில் முக்கிய இடம் தமிழிசைக்கருவிகளுக்கே.
தமிழிசைக்கருவிகளில் மேதமை அவர். காண்க:
வயோலின், தபேலா, புல்லாங்குழல் இம்மூன்றும் இல்லாத அவரின் பாடல்கள் அரிது.
வயோலின் என்பது தமிழர்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய 14 யாழ் கருவியின் நீட்சி. குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாய். வில்யாழ். வி-யாழ், vi-yol, violin.
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது.
•வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
•பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
•மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
•சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
•கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
•செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
•சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது) எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாத்தான் குளம் அ.இராகவன் என்பவர் தனது நூலில் 24 வகையான யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:
•வில் யாழ்
•சீறி யாழ், செங்கோட்டியாழ்
•பேரி யாழ்
•சகோட யாழ்
•மகர வேல்கொடி யாழ்
•மகர யாழ் / காமன் கொடி யாழ்
•மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
5. இசையின் 5 பரிமாணங்களையும் பரிணாம வளர்ச்சி அடையச்செய்த தமிழிசை டார்வின் அவர்.
1. தோல் இசை-க்கு தபேலா
2. துளை இசை-க்கு புல்லாங்குழல்
3. நரம்பு இசை-க்கு வயோலின் என்ற வில் யாழ்
4. வாய்ப்பாட்டு இசை-பாடகர்
5. ஒத்திசை-குழுவினர் ஒத்திசைப்பாடல்.
6. பாக் (Bach) இசைக் கோர்வைகளில் (Partita) தமிழிசை (ஹம்சத்வனி- காண்க:) கண்ட தொல்லிசை நுட்பவியலாளர் அவர். காண்க:
7. எத்தனை இசை நுணுக்கங்கள் ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு இசைக்கருவியிலும் புது முயற்சி, இசைக்கருவியே இல்லாமல் பாடல், ரிதம் மட்டுமே கொண்ட பாடல், 3 சுரங்கள் மட்டுமே கொண்ட பாடல், தமிழிசை மட்டுமே கொண்ட பாடல், 4 கருவிகள் மட்டுமே கொண்ட பாடல், பாடகர்களின் அடுக்குத்தொடர் குரல் வரிசை முயற்சி, பாடலிடை புதுமைகள், பின்னணி இசையில் தீம் புதுமைகள், என ஒரு நூறாண்டு கால பல்நூறு கலைஞர்களின் ஒட்டுமொத்த திறமைகளை 15 ஆண்டுகளுக்குள் செய்து முடித்துவிட்டு இன்னமும் இசைக்கு உயிரோட்டம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
8. ஆரியம் ஒழித்துக்கட்ட நினைத்து முடியாமல்போய் உள்வாங்கிக் கொண்ட பல விசயங்களில் இளையராஜா 21 ம் நூற்றாண்டின் தமிழ்க் குறியீடு.
9. அவரது பின்னணி இசை போல பின்னணியில் போராடும் போராளி.
பாவலரின் பொதுவுடைமை புரட்சி அவரின் பின்னணியில்.
அம்பேத்கரின் நீலப் புரட்சி அவரின் பின்னணியில், ஆரியத்துக்கு எதிரான தமிழர் இசையின் தொல் இசைத் தமிழ்ப் புரட்சி அவரின் பின்னணியில்.
வெளிப்படையில் மாற்றாய் தெரிந்தாலும் பின்னணியில் சாதித்து மட்டுமே போராடியிருக்கிறார்.
10. தமிழைப்போல அவரும் இக்காலத்தில் அங்கீகரிக்கப்படாமலே இருக்கிறார். வெறும் திரைப்பாடலோடு மட்டும் அவரை மதிப்பீடு செய்வது தவறு என்று வரலாறு உணரும். ஆரியத்தின் கொடுக்கு இன்னும் முறிக்கப்படவில்லை. தமிழரைக்கொண்டே தமிழர்களை அழிக்கும், இராமாயண வாலியைக் கொன்றது போல் மறைமுகமாய்க் கொல்லும் ஆரியம் வெல்லப்போவது இல்லை. காண்க:
தமிழ் எந்நாளும் வெல்லும்.
11. 1000 திரைப்படங்களுக்கு மேல் இசைஅமைத்துக்கொண்டே இருக்கும் இளைய ஞானி இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் வாழப்போகும் தமிழ் ரத்னா.. இளையராஜா வின் தீவீர ரசிகர் பதிவு, forward செய்யப்பட்டுள்து,,,,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...