Friday, April 19, 2019

பொது அறிவு பற்றிய செய்திகள்...

பொதுவாக நாம் பழங்களை உண்டு விட்டு அதன் தோல்களை தூக்கி எரிந்து விடுவோம்... இனி அப்படி செய்யாமல் பழம் மற்றும் காய்கறித் தோல்களை உபயோகமாக எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம் வாருங்கள்...
உருளைக்கிழங்குத் தோலில் விட்டமின் சி உள்ளது. இது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களை சீர் செய்யும். இத்தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்தவுடன் கண்களைச் சுற்றி 15 நிமிடங்களுக்கு வைத்தால் கண்களுக்கு குளிச்சியை அளிப்பதுடன் பொலிவுடன் காணலாம்.
வாழைப்பழத்தோலை பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்கள் பளீச்சென்று வெண்மையாக மாறிவிடும்.
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சைத் தோலை ஜன்னல்கள் மற்றும் கதவின் ஓரங்களில் வைக்க கரப்பான் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
இந்த பழத் தோலை குளிக்கும் நீரில் (வெதுவெதுப்பான) சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு அந்த நீரில் குளித்தால், சருமம் பொலிவுடனும் நறுமணத்துடனும் நீண்ட நேரம் இருக்கும்.
பீர்க்கங்காய் தோலை காய வைத்து வழக்கமான துவையல் அரைத்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்...
அதே போல கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதன் தோலையும் காய வைத்து துவையல் அரைத்து சாப்பிட மூல வியாதிக்கு சிறந்த தீர்வு ஆகும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...