ஏறத்தாழ 70 % மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை பிரச்சாரங்கள், 100 % ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
30 % ஓட்டு பதிவாகாமல் போனதற்கு என்ன காரணம் ?
ஒரு சிலருக்கு பட்டியலில் பெயர் இல்லை.
புதிய வாக்காளர்கள் பலருக்கு பெயர்கள் இடம்பெறவில்லை.
அதுபோக சிலர் கடைசிவரை எவனுமே ஒரு பைசா கூட எனக்கு மட்டும் தரவில்லை என்ற கோபத்தில் ஓசியல் ஓட்டு போட முடியாது என்று கோபத்தில் போடாமல் போனவர்கள்.
கிடைத்த விடுமுறையை ஜாலியாக பயன் படுத்திக் கொண்டு, நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஓட்டு போடுவதை பெரிய சாதனையாக நினைத்து தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் சிலர் .
ஓட்டு இருந்தும், வெளியே வந்து ஓட்டே போடாம இருப்பவர்கள்தான், அரசின் மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் முதலில் சென்று பெற்றுக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி என்னம்மோ இவனுங்கதான் ஓட்டு போட்டு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்த மாதிரி கேள்வி கேட்பாங்க.
மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஓட்டுப் போடும் போது தங்களுடைய ஆதார் கார்ட், பாஸ்போர்ட், பேன் கார்ட், உட்பட அனைத்தையும் ரெனிவல் செய்யும் முறையை அமுல் படுத்த வேண்டும்.
ஓட்டு உள்ளவர்கள் அனைவரும் ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்ற நிலை வரும்.
இல்லாவிட்டால் அனைத்து கார்டுகளும் பிளாக் செய்யப்பட்டுவிடும்.
அதன்பின் அதற்கான விளக்கம் அளித்து, மீண்டும் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஓட்டு போட வந்து, அவர்களுக்கு ஓட்டு இல்லாமல் போனால், அதற்கான நடவடிக்கைகள் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.
இதனால் கள்ள ஓட்டு போடுவதும் முற்றிலும் தடுக்கப்படும்.
இவை எல்லாவற்றிற்கும் சிறந்த வழி:
ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்து விட்டால் எல்லாமே சாத்தியம்!
ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்து விட்டால் எல்லாமே சாத்தியம்!
No comments:
Post a Comment