விதிமுறைகளை மீறிய மனைகள், மோசடியாக விற்கப்படுவதை தடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும்.
தமிழகத்தில், எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி; அதற்கு மேலான நிலத்தை, வீட்டு மனைகளாக மேம்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்வதுகட்டாயமாகி உள்ளது.
புதிய மனை பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பதிலும், மனைகளை பிரிப்பதிலும், இந்த விதியை அமல்படுத்துமாறு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான உத்தரவு கடிதங்களை, சி.எம்.டி.ஏ.,வும், டி.டி.சி.பி.,யும், உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வருகின்றன.
இதையடுத்து, புதிய மனைப்பிரிவுக்கு அனுமதி தரும்போது, ஆணையத்தில் பதிவு செய்வதும், ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட்டு உள்ளது.இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனை களை விற்க முடியாது. அப்படி யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளும், ரியல் எஸ்டேட் ஆணையமும்நடவடிக்கை எடுக்கும்.
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:மனை விற்பனையை முறைப்படுத்துவது என்ற அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை, அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதை தடுப்பதாக அமையும். அதே நேரம், ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கும் உத்தரவுகளில், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு நிபந்தனை சேர்க்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சிகள் வழங்கும் உத்தரவுகளில், இந்த நிபந்தனைகள் சேர்க்கப்படுவதில்லை.இத்தகைய உள்ளாட்சி அமைப்புகள் மீது, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., - ரியல் எஸ்டேட் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க உள்ளன. ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் தான், அதிகம் உருவாக்கப்படுகின்றன.
உரிய விதிகளை பின்பற்றாமல், அங்கீகாரம் அளிக்கப்பட்ட வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து, மனைகளை விற்பவர்கள் தண்டிக்கப்படுவர். உள்ளாட்சி அமைப்புகள் துணையுடன், மனை விற்பனையில் நடக்கும் மோசடி முடிவுக்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment