சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.
சந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது.
மேஷம் - துவரை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம் - மொச்சை தானம் செய்து, மகாலட்சுமியை வழிபடுங்கள்.
மிதுனம் - பச்சை பயிறு தானம் செய்து, பெருமாளை வழிபட வேண்டும்.
கடகம் - பச்சரிசி தானம் செய்து, அம்பிகையை வழிபடுங்கள்.
சிம்மம் - கோதுமை தானம் கொடுத்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்யலாம்.
கன்னி - அவல் தானம் செய்து, கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.
துலாம் - நாட்டு சர்க்கரை தானம் செய்து அலங்காரத் தில் இருக்கும் அம்பிகையை வழிபடுங்கள்.
விருச்சிகம் - பருப்பு சாதம் தானம் செய்து, அங்காரகனை வழிபட வேண்டும்.
தனுசு - கொண்டைக் கடலை தானம் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
மகரம் - தயிர் சாதம் தானம் செய்து விநாயகரை வழிபடலாம்.
கும்பம் - எள் உருண்டை தானம் செய்து, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
மீனம் - லட்டு தானம் செய்து ஆன்மிக குருமார்களின் ஆசி பெற வேண்டும்.
வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத செயல்களைச் செய்தால் தடைகள் அகலும். வெற்றியும் வந்து சேரும் என்று சொல்லப்படுகின்றது.
No comments:
Post a Comment