Tuesday, September 3, 2019

ப,சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது...

கர்நாடகா காங்கிரஸில் வலிமையான தலைவர்களில் ஒருவராக திகழும் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
4 நாள்கள் விசாரணைக்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்தவர் டிகே சிவக்குமார். 
இவர் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள வலிமையான தலைவராக திகழ்கிறார்.
அண்மையில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு கோரிய மனுவையும் ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து டெல்லியில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு டிகே சிவக்குமார் ஆஜரானார்.
அவரிடம் கடந்த நான்கு நாள்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணைக்கு பின்னர் டிகே சிவக்குமாரை நேற்று இரவு அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அவரை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
ப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகே சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டிகே சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...