Saturday, September 21, 2019

துரதிர்ஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரம்.

தங்களின் வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பவர்கள், தொடர்ந்த துரதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்தால் நல்ல பலனை காணலாம்.
மனிதர்கள் எல்லோருமே முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கேற்ற வினைப்பயன்களை தங்களின் வாழ்வில் அனுபவிக்கின்றனர் தீமைகளுக்கேற்ற சித்தி நிலை முடிந்த ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் முற்பிறவி கர்மாவை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று கருதினாலும், இப்பிறவியில் நன்மையான செயல்களை செய்தாலும் சிலர் தொடர்ந்து துன்பங்கள் அனுபவிக்கும் நிலையை நாம் காண்கிறோம்.
அப்படிப்பட்ட நபர்களுக்கு இறைவனின் அருள் இல்லாததே இத்தகைய துன்பங்களுக்கு காரணம். இத்தகைய பிரச்சனைகளை போக்க சுலபமான வழிமுறையை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தங்களின் வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பவர்கள், தொடர்ந்த துரதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்கள் ஒரு பௌர்ணமி அன்று நல்ல தரமான தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து, அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றி, பின்னர் அத்தேங்காயை கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும், வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றி முடித்த பின்பு ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் கழற்றி விட்டு அந்நீர்நிலையில் வெறும் காலுடன் இறங்கி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற மந்திரத்தை 11 தடவை ஜெபித்து, காக்கும் கடவுளாகவும், செல்வங்களை அருள்பவராகவும் இருக்கும் மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம், துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும்.
இந்த முறையை முறையாக செய்பவர்களின் வீட்டில் வளங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது. வீட்டை பீடித்திருக்கும் தரித்திர நிலை சீக்கிரத்தில் நீங்குவதை காணலாம். மேலும் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிம்மதியான உணர்வை பெறுவார்கள். அனைவருக்கும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...